...

10 views

சர்ப்ப விதி
ஆடி மாதம் சா்ப்பங்கள் தெய்வத்தை நோக்கி  இருக்கும்  தவசு காலம். அப்படி தவம் புரிந்த ஒரு சர்ப்பத்தின் விதி தான் இக்கதை.
         
லதா, மணி ஏழு ஆகுது. இன்னுமா தூக்கம்.
உன் சித்தி, சித்தப்பா  பாண்டிச்சேரி வந்துவிட்டார்கள். பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். இருங்கம்மா, நானும் பத்து நிமிடத்தில் வரேன் என்றால் லதா. சீக்கிரமா தூங்கினால் தான் விடியற்காலையில் எழுந்திாிக்கலாம். நீ ரெண்டு மணி வரையும் டொக் டொக்னு தட்டி கொண்டே இருந்தால் எப்படி?..

         "கௌசல்யா சுப்ரஜா ராம
           பூா்வா ஸந்த்யா ப்ரவா்த்ததே
           உத்திஷ்ட நர ஸாா்தூல
           கா்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"

அம்மா காலிங்பெல் அடிக்கிறது என்று ஆர்வத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தாள் லதா. சித்தி சாரதாவின் குடும்பம் பாண்டிச்சேரியில் அக்கா தேவியின் வீட்டில்.
மதுரையில் சாரதா கிளம்பும் போது நினைத்து  பார்க்கவில்லை தான் பாண்டிச்சேரியிலிருந்து  திரும்பி வரும்போது சர்ப்பத்தின் விதி தன் கையில் தான் என்று.

அக்கா தங்கைகள் ஒன்று கூடினால் சொல்லவா வேண்டும்? உலகத்தையே மறக்கடிக்கும் அவர்களது வாழ்க்கையின் சுவாரஸ்யமானப் பேச்சுக்கள்  ஒன்று மிச்சம் வைக்கவில்லை.  சாரதா இன்றைக்கு சாயங்காலம் பிள்ளைகளுக்கு புது துணி எடுத்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வரலாம் என்றாள் தேவி. எதுக்கு புது துணி அக்கா. நீ சும்மா இரு சாரதா நான் பிள்ளைகளுக்கு வாங்கி தரேன்.  பிள்ளைகளா நேரம் ஆகியது சீக்கிரமா துணி எடுத்துவிட்டால் பக்கத்தில் கடற்கரைக்கும் போகலாம்.

துணி கடையில் வேலை முடிந்தது.  அக்கா நேரம் ஆகியது கடற்கரை அடுத்தமுறை போகலாமே என்றாள் சாரதா. பிள்ளைகள்  ஒரே பிடிவாதம் கடற்கரை போகவேண்டும்
என்று. சாரதா, சீக்கிரமா கிளம்பிடலாம் ரொம்பநேரம் ஆகாது. சரி அக்கா வாங்க போகலாம். பிள்ளைகள் கடலுக்குள் சென்று விளையாடினார்கள். சாரதா வா நாமும் கடலுக்குள் போகலாம்.

ஒருவரை ஒருவர் கடலுக்குள் இழுத்து,  தண்ணீர் தெளித்து விளையாடினார்கள். அப்போது, அக்கா தங்கை இருவரும் நீரில் மூழ்கி எழும்பும் போது அவா்களே  எதிர்பாா்காத  வகையில் மிகப் பெரிய ஆச்சரியம்  சாரதாவிற்க்கு கிடைத்தது.

ஐந்து தலை ஐம்பொன் நாகம் சாரதா கையில் கிடைத்தது. இதை பாா்த்ததும் இருவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. சாரதா உயிருள்ள சா்ப்பத்தை  தன் கையில் சுமந்தது  போல் உணர்ந்தாள்.  மனதில் பயம், கை நடுக்கம் என்ன செய்வது என்று தேவியிடம் கேட்டாள்.  தெய்வமே உன்னை தேடி வந்திருக்கு. உனக்கு நல்ல  நேரம் ஆரம்பித்து விட்டது. நீ மதுரைக்கு கொண்டு சென்று உன் வீட்டில் வைத்து பூஜை செய் என்றாள்.

கிருஷ்ணரின் தந்தை வாசுதேவா் மதுரா சிறையிலிருந்து கோகுலத்திற்கு பரமாத்மாவை கொண்டு செல்லும் போது அவருக்கு ஏற்படும் இன்னல்களை கடந்து
விதியை நிறைவேற்றினார். அவருக்கு
கொடுக்கப்பட்ட அதே கடமை தான் நமக்கும்
என்று சாரதா உணரவில்லை. இப்போது சாரதாவின் குடும்பம் மதுரையில். தன் அக்கா தேவி கூறியது போல் அந்த ஐம்பொன் நாகத்தை அவள்  தன் வீட்டிற்கே
எடுத்து வந்து பூஜை செய்ய ஆரம்பித்தால். நாட்கள் நகர்ந்தது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வாள். தினமும் பால் வைத்து பூஜை  செய்வாள்.
நாகத்தின் விதியை மாற்றி அமைப்பது அவ்வளவு எளிதில்  முடியுமா? நாட்கள் செல்ல செல்ல வீட்டில் சிறு சிறு சங்கடங்கள், தடைகள், பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. சாரதாவிற்கு மனதில் சிறு உறுத்தல் தோன்றியது. ஐம்பொன் நாகத்தை ஏதாவது ஒரு கோவிலில் வைத்து விடலாம் என்று எண்ணினாள். ஆனால், எங்கே வைக்கலாம் என்று குழப்பம்.

அவளும், அவள் குடும்பத்தினரும் தங்களுக்கு தெரிந்த கோவிலின் பெயர்களை தனி தனி காகிதத்தில் எழுதி நாகத்தின் முன் சீட்டு குழுக்கல் போட்டு
எடுக்கலாம் என முடிவு செய்தார்கள். வீட்டிற்கு வெளியே ஒரு குரல் "சாரதா, பூ வந்திருக்கு, கொஞ்சம் சீக்கிரம் வாங்கம்மா " என்று.  என்னக்கா இன்றைக்கு  ரொம்ப சீக்கிரமா வந்தாச்சு.

என் பிள்ளைக்கு வண்டு கடித்துவிட்டது சாரதா என்றால் பூ விற்பவள். அதற்கு சாரதா,  டாக்டரிடம் கூட்டிட்டு போறீங்களா  அக்கா. அதான் சீக்கிரம் வந்தீர்களா? என்றாள். இல்லை சாரதா நீ பாண்டிச்சேரியில் இருந்து வருவதற்கு முதல் நாள் கடித்தது.  உடனே டாக்டரிடம் கூட்டிச் சென்றேன். ஆனால், சாியாகவில்லை. அரிப்பு கூடிட்டே  தான் போனது.  எனக்கு தெரிந்தவர் ஒருவர் சொன்னார், " விஷம் கடிக்கென்றே தீர்த்தம் கொடுக்கும் கோவில் அழ௧ர் கோவில் போகும் வழியில்  கடச்சணேந்தலில் இருந்து 2 கிமீ தூரத்தில் புதுப்பட்டி என்னும் கிராமத்தில் இருக்கிறது. கோவில் பெயர் சடச்சி அம்மன் என்றார். "
அங்கு 3 வெள்ளி கிழமை மட்டும் போய் வாருங்கள் சரியாகிவிடும் என்றார்.

நீங்கள் போனீர்களா? சாியாகிவிட்டதா என்று ஆர்வத்துடன் கேட்டாள். அதற்கு பூ விற்பவள், " 2 வாரம் சென்று வந்தோம். ஒரு வாரத்திற்குள்  நல்லதொரு முன்னேற்றம் கிடைத்தது. " என்றாள். இன்று மீண்டும் போகவேண்டும் என்று கூறினாள்.
அக்கா கோவில் பெயர் சொல்லுங்கள்  என்று கேட்டாள். கோவில் பெயர் " சடச்சி அம்மன் " என்று கூறிவிட்டு சென்றாள்.

அனைவரும் தங்களுக்கு தெரிந்த கோவில் பெயர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், அழகர் கோவில் என்று மதுரையை சுற்றியுள்ள கோவி்ல்களின்  பெயர்களை எழுதினார்கள். சாரதாவின் மனம் சடச்சி அம்மன் கோவிலை மட்டுமே சுற்றி வந்தது. அவள் அந்தக் கோவிலுக்கு சென்றதில்லை. ஆயினும், அவள் சீட்டில் சடச்சி அம்மன் என்று எழுதி வைத்தாள்.
பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமியை அழைத்து நாகத்தின் முன் வைத்திருக்கும் குலுக்கல் சீட்டை எடுக்கச் சொன்னார்கள்

அந்தச் சிறுமி எடுத்து கொடுத்தது சடச்சி அம்மன் கோவில். சாரதாவிற்கு  மகிழ்ச்சி.
மறுநாள் நாகத்திற்கு வீட்டில் பொங்கல் படைத்து பூஜை செய்து கோவிலுக்கு எடுத்துச் சென்றாள். கோவிலுக்கு சரியாக வழி தெரியாமல் கடச்சணேந்தலை கடந்து  வந்து விட்டோமோ . சரி, வழியில் மாடு மேய்க்கும்   அம்மாவிடம் விசாரித்து பார்ப்போம். அம்மா, "இங்கிருந்து புதுப்பட்டி சடச்சி அம்மன் கோவிலுக்கு வழி இருக்கா? " இப்படியே கம்மாகரை  பகுதியில் நுழைந்தால்  கோவில் தெப்பக்குளம் வரும் என்றாள் மாடு மேய்க்கும் பெண்.  கம்மாகரைக்குள் சென்றதும் திடீரென்று சரசரவென்று சப்தம் கேட்டது. நானே கோவிலுக்கு வழி தெரியாமல் தனியாகச் செல்கிறேன்  இங்கே ஏதோ சத்தம் கேட்கிறதே. சடச்சி அம்மா, நான் உன் கோவிலுக்கு வந்ததில்லை நீ தான் என்னை கூட்டி செல்லவேண்டும். கையில் வைத்திருக்கும்  ஐம்பொன் நாகத்தை எண்ணி
சடச்சி அம்மனை  வணங்கினால்.

அவள் கண்முன் கருநாகம் வேகமாகச் சென்று ஒரு தெப்பக்குளத்திற்கு பக்கத்தில் வந்ததும் மறைந்து விட்டது. அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒருவரிடம்  சடச்சி அம்மன் கோவிலுக்கு வழி கேட்டாள் சாரதா. அவர்கள், இது தான் கோவில் தெப்பக்குளம். இங்கே குளித்து விட்டு தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நாங்களும் கோவிலுக்கு தான் வந்தோம். எங்களோடு வாருங்கள் என்றார்கள்.

சாரதாவின் சந்தோஷத்திற்க்கு எல்லையே இல்லை. குளத்தில் குளித்து விட்டு கோவிலுக்கு சென்று ஐந்து தலை ஐம்பொன் நாகத்தை பூசாரியின் கையில் கொடுத்தாள். அதற்கு பூசாரி கூறியது, " இரண்டு தினங்களுக்கு முன்னாள் தான் நாங்கள் இங்குள்ள சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிவனுக்கு செய்ய வேண்டும் என அளவு எடுக்க வரவழைத்தோம் ஆசாரியை. இன்னும் அளவு கூட எடுக்கவில்லை. இப்போது என் கையில் ஐந்து தலை ஐம்பொன் நாகமே  கிடைத்தது. " என்றார்.

சாரதாவிற்கு  ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த நாகம் அக்கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு செய்தது போலவே இருந்தது. பிறகு சாரதா நாகம் தன் கையில் கிடைத்ததை பற்றி அங்கே கூறினாள்.

இதுவே சர்ப்பத்தின் விதி.  பாண்டிச்சேரி கடற்கரையில் எடுக்கப்பட்டு மதுரையில் புதுப்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் சடச்சி அம்மன் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு செல்ல வேண்டும் என்பது அந்தச்  சர்ப்பத்தின் விதி. சர்ப்பம், சாரதா இருவரின் தவமும் நிறைவேறியது. இது ஒரு உண்மை சம்பவம்.


© Ramyakathiravan