...

3 views

துரோகி
அவன் முகம் பார்க்காதவள்
அவன் நிறம் தெரியாதவள்
அவன் மனம் அறியாதவள்
அவன் குணம் புரியாதவள்
அவனோடு பழகிப்
பார்க்காதவள்
அவனோடு சில நாள் மட்டும்
கருத்து பரிமாற்றம்
அவன் துரோகி என்று மட்டும்
எப்படி பழி சுமத்துகிறாள்?
முத்துப் பரல்களா
மாணிக்கப் பரல்களா என்று
ஆராய்ந்து பார்க்காமல்
அன்று
அரசன் செய்த தவறை
அவளும் அல்லவா
இன்று செய்கிறாள்!

விக்ணு கௌசிகா