...

7 views

மீண்டும் காதலிப்பதா
மீண்டும் காதலிப்பதா,
வேண்டாம் ஒரு முறை இதயம் உடைந்து சிதைந்து போனது போதும் ,
அவளின் நினைவலைகள் நீங்காமல் நித்தம் நித்திரையை தொலைத்து கொண்டு இருக்கிறேன்,
உயிராய் இருந்து உயிர் பிரிந்து ஜடமாய் மற்றுமொரு பிறவி வேண்டுமா ,
கண்கள் இரண்டும் வற்றி கானல் நீர் கூட தெரியா வண்ணம், வண்ணங்கள் இழந்த இதயம் மட்டும் இருக்க,
அவளும் எங்கோ சென்று விட்டால்,
மீண்டும் ஒரு முறை இதயம் இறந்திட வேண்டாம்,
நித்தம் நித்திரை எல்லாம் காணாமல் போக நிஜம் மறந்து அவளின் நினைவுகள் மட்டும் சூழ,
ஏனோ இந்த பிறவி இன்றோடு முற்று புள்ளி வைத்து விடாதா,
பைத்தியம் பிடித்து தான் இருக்கிறேனோ யார் அறிவார் நான் கூட அறியேன் அவளின் கால் தடம் மட்டும் தெரிய அவள் எங்கே சென்றால் என் வாழ்வில் இருந்து, ஒரு போதும் என் இதயம் உறங்காதே உயிர் அற்ற உடல் மண்ணில் சாயும் வரை.
மீண்டும் காதல் செய்ய மனிதனாய் நான் இல்லை
© அருள்மொழி வேந்தன்

Related Stories