23 views
நான் சிரிக்கிறேன்
அந்த
ஒப்பனை பெட்டியில்
தேடினேன்
கிடைத்தது
கசங்கிய நிலையில்
மடித்து வைக்கப்பட்ட
புன்னகை
பலமுறை
ஒட்டி ஒட்டி
பிரித்தெடுத்ததால்
சற்றே
கிழிந்து கிடந்தது
சென்றமுறை
ஒட்டி இருந்தபோது
கொஞ்சம்
கண்ணீர் பட்டதால்
ஓரத்தில்
சாயம் போயிருந்தது...
உதடுகளை ஈரப்படுத்தி
புன்னகையை ஒட்ட
பின்னணியில் கேட்டது
வாய்மூடி சிரி
பல்லை காட்டாதே
பெண் சிரிச்சா போச்சு
இன்னும் இன்னும்
இன்னுமென
கேட்ட விமர்சனங்கள்
அலை அலையாய்
மேல் எழும்ப...
ஒப்பனையில்
புன்னகை
வேண்டாமென்று
தோன்றியது
கழற்றி
மடித்து வைக்கும் முன்
கடைசியாய்
ஒருமுறை
சிரித்து பார்த்தேன்
ஆம் நான் சிரிக்கிறேன்
எனக்காக மட்டும்...
-குமுத மீரா
© Meera
ஒப்பனை பெட்டியில்
தேடினேன்
கிடைத்தது
கசங்கிய நிலையில்
மடித்து வைக்கப்பட்ட
புன்னகை
பலமுறை
ஒட்டி ஒட்டி
பிரித்தெடுத்ததால்
சற்றே
கிழிந்து கிடந்தது
சென்றமுறை
ஒட்டி இருந்தபோது
கொஞ்சம்
கண்ணீர் பட்டதால்
ஓரத்தில்
சாயம் போயிருந்தது...
உதடுகளை ஈரப்படுத்தி
புன்னகையை ஒட்ட
பின்னணியில் கேட்டது
வாய்மூடி சிரி
பல்லை காட்டாதே
பெண் சிரிச்சா போச்சு
இன்னும் இன்னும்
இன்னுமென
கேட்ட விமர்சனங்கள்
அலை அலையாய்
மேல் எழும்ப...
ஒப்பனையில்
புன்னகை
வேண்டாமென்று
தோன்றியது
கழற்றி
மடித்து வைக்கும் முன்
கடைசியாய்
ஒருமுறை
சிரித்து பார்த்தேன்
ஆம் நான் சிரிக்கிறேன்
எனக்காக மட்டும்...
-குமுத மீரா
© Meera
Related Stories
30 Likes
4
Comments
30 Likes
4
Comments