...

2 views

பொய்
மெய் என்னும் பொய்யை
போற்றி தினம் காக்க
பொய் பொய்யாய் பேசி
ஊன் வளர்க்கும் மனிதா...
நீ என்பது ஓரெழுத்து பொய்
நான் என்பது ஈரெழுத்து பொய்
அம்மா என்பதும்
அப்பா என்பதும்
மூன்றெழுத்து பொய்யடா...
உற்றார் என்பதும்
பெற்றோர் என்பதும்
நான்கெழுத்து பொய்யடா...
ஐந்தும் ஆறும்,
ஏழும் எட்டும்
எட்டும் ஒன்பதும்,
ஒன்பதும் பத்தும்
அடுத்தடுத்த பொய்களடா...
பொய்யாலே பிறந்து
பொய்யாலே வளர்ந்து
பொய் பொய்யாய் பேசும்
போக்கற்ற மனிதா...
இங்கே காணும்
யாவும் பொய்யடா
இது வரை காணாத
அவனே மெய்யடா!

விக்ணு கௌசிகா
© VIGNU GHOUSIKA