...

7 views

ஏனென்றால் அவன் அன்பானவன்
அன்பை கொடுத்தால்அழுகையை கொடுப்பான்
ஏனென்றால் அவன் அன்பானவன் அக்கறைய கேட்டால் அவமதிப்பை கொடுப்பான்
ஏனென்றால் அவன் அன்பானவன் ஆறுதல் கேட்ட ஆசையை தீர்த்துக்கொள்வான்
ஏனென்றால் அவன் அன்பானவன் இதயத்தை கேட்டால் இழப்பை சொல்லிக் கொடுப்பான்
ஏனென்றால் அவன் அன்பானவன் ஈர்ப்பை கேட்டால் ஈட்டி போல் வார்த்தைகளை கொட்டித் தீர்ப்பான் ஏனென்றால் அவன் அன்பானவன் உறவை கேட்டால் உயிரை எடுப்பான் ஏனென்றால் அவன் அன்பானவன் ஊன்றுகோலா இரு என்றால் உதாசீனப்படுத்துவான்
ஏனென்றால் அவன் அன்பானவன் என்னவன் நீதான் என்றால் எட்டி உதைப்பான்
ஏனென்றால் அவன் அன்பானவன் ஏற்றமாக இரு என் வாழ்வில் என்றால் ஏறி மிதிப்பான்
ஏனென்றால் அவன் அன்பானவன் ஐக்கியமாய் இருப்போம் என்றால் ஐந்து நிமிடம் கூட இருக்க மாட்டான் ஏனென்றால் அவன் அன்பானவன் ஒற்றுமையாய் வாழ்வோம் என்றால் நீ ஒருத்தியாக தான் வாழ வேண்டும் என்பான்
ஏனென்றால் அவன் அன்பானவன்
நீ ஒருத்தன் மட்டும் தான் என் வாழ்க்கை என்பேன் நீ ஒருத்தி மட்டும் என் வாழ்க்கையா அல்ல என்பான் ஏனென்றால் அவன் அன்பானவன் ஓவியமே நீதான் என்பேன் ஓங்கி சொல்வான் ஓவியத்தின் கிறுக்கல் மட்டும்தான் நீதான் என்று ஏனென்றால் அவன் அன்பானவன்
அவனுக்கு அவன் இட்ட பெயர் அன்பானவன்