...

3 views

அன்புள்ள சங்கீதா
உன்னோடு கதைத்திடும் நிமிடங்கள் என்னை நான் மறந்து போகிறேன், தொலை தூரம் நீ இருக்க தொலைந்து போன இதயம் உன்னிடம் இருக்கவே நித்தம் நித்தம் உன்னை தேடுகிறேன்,
இரவின் நிலவின் வெளிச்சத்தில் நான் தனித்து இருக்கும் நொடியில் உன் வதனம் மனதில் தோன்ற நித்தம் நித்தம் நிலவிடம் கதைத்து கொண்டு இருக்கிறேன்,
என் மனதில் நீ என்ன செய்தாய் உன்னிடம் நான் தொலைந்து போகவே இத்தனை ஆசை கொள்கிறேன் கதைத்திட நேரம் போதும் அழகே! உன் மௌன மொழியில் திளைத்து இருக்கும் நானும் நட்சத்திர வானின் நடுவில் நிலவை நீ தெரிய என்னை மறந்து உன்னை நினைத்து கொண்டு இருக்கிறேன்! கதைகள் பல பேசி கவிதைகள் பல எழுதி உன்னிடம் மொத்தமாய் நான் கொடுக்கவேண்டும், என் எழுதுப்பிழை நீயடி! எழுத துடித்திடும் நொடியில் உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தொலைத்து விடுகிறேன் என் செய்வேன் நான் இவள் போல் அழகியை காணும் பொழுதில் கண்கள் தான் தாங்குமோ நிலைத்து இருக்கும் இரு விழிகள் அவள் இதழின் மேல்!
வானவில் மொத்தமாய் இவளிடம் தோற்று போக, கார்மேக கூந்தலில் நான் காணாமல் போக! என்ன மாயம் செய்கிறாய் நீ! கதைகள் கூற மறந்த காவியம் நீயடி எத்தனையோ அழகை நான் வர்ணிக்க உன்னை வர்ணிக்க நினைக்கும் பொழுதில் பூலோகம் மறந்து போகிறேன் நானடி! என்னுள் மாயம் செய்த மாயவியே! காதலின் காவியமே!

© அருள்மொழி வேந்தன்