...

7 views

குறை என்பது குற்றமா??
மனித குணத்தின்
வகைகளோ ஏராளம்…!
முகத்தில் உமிழ்வது ஒருவிதம்
முதுகில் குத்துவது ஒருவிதம்
உள்ளொன்றை வைத்து
புறமொன்று பேசுவது
தனி ரகம்..;
ஆதிவாசிகளே தேவலாமென
உச் கொட்ட செய்யும் இணையவாசிகள்..!

பற்றும் கயிறே
பாசக்கயிறானால்
என் செய்வேன்...?

நம்பிக்கையை விதைத்து
அருவருப்பை அறுவடை
செய்வது நான் மட்டும் தானோ?

எதையோ மறக்க மறைக்க
நானேதௌ கிறுக்க
சகிக்கவியலா
சில்லறைகள் சில
சத்தமிட நல்லகாலமாய்
என் காதில் விழவில்லை..!
நன்றி இறைவா...!


குற்றமிருந்தால் விமர்சி
குறையிருந்தால் நீ யோசி.
தனியே வசைபாடியும்
வஞ்சம் தீராது
வக்கற்ற நீ
ஆள் சேர்த்து அபலையின்
நா கூசும் வார்த்தைகளால்
குறையொன்றை பரிகசித்தால்
நின் மூளையதிலும்
குறையுண்டு தானே...?
நேரெதிராய் பேச
நேர்மையற்ற பேடிகளே
கவனித்தில் கொள்ளுங்கள்..
குறைகளற்ற உயிர்களென
எவருமில்லை உலகில்

இழைத்தது தவறென கூட
அறிய ஞானம் இல்லையோ உமக்கு..
மனிதம் மரத்துப் போனோரே


அதீத பாவத்தின் ஊதியமதை
சேர்த்து சேர்த்து வைக்கும் நீ
மண்ணிலே நரகம் காணும்
நாளும் வரும் சீக்கிரமே...

விமர்சனப் பந்துகளை
என் மீது வீசுகிறாய்..
அப்டியே நில் !
வீசிய பந்துகள்
அதே விசையில்
ஆனால் எதிர்திசையில்
உன் முகத்தில் அடிக்கும் …!

உண்ணும் தட்டொன்றில்
இருந்த நரகல் போலான
ஒரு அருவருப்பே
உன்னோடான நட்பிலிருந்த
நாட்களெனக்கு..!
அருவருப்பு மட்டுமே
நீ எனக்கு தந்தது..!!

© ER.RANJITHA DHARA