அதீத அன்பு
இதழ் சொல்லில் மொத்தமும்
விழிச்சொல்லுமென்றால்
நான் சொன்னது நிஜமென்று
கூறு நீ...
மனம் விட்டு பேசித்தீர்க்க ஏராளம் உண்டெனில்
பேசத்தெரியாதவையோ
அதை முன்னேக் கூறிவிடுவது நன்று..!
உன்னோடு உரையாட
கரங்களைக் கோர்த்துக்கொள்ள
வேண்டாம்
வெறும் உன்யிமையின் பார்வையொன்றுப்
போதுமே..!
வார்த்தைகளில் வேண்டாமே நம் காதல்..
பார்வையை பரிமாற்றி மௌனமாய்
விரல்களிரண்டும் கோர்த்துப் பயணம் செய்வோமே..
என் புண்ணான மனதை
உன் அழகிய கண்ணக்குழி புன்னகையால்
ஆற வை நீ..
என்னுள்ளத்தில் இருக்கும் காயத்தின் வலியை ஆற்ற
உன் இரு இமையின் அசைவொன்றே போதுமே…!
தாலாட்டு தென்றலே நீ
பிழைநீங்கி உரையாடுவாயோ தன்மொழியை…!
அடங்க மறுத்தவனை
அகந்தை கொள்ளவைத்தவள் நீ..
உன் உள்ளத்தின் நிறைந்த நேசத்தால்…!
அடங்கிப் போனேன்
உன் அன்பென்ற ஒன்றை
இதழ் முத்தத்தில்…!
அத்தனையும் எளிதில் அடங்காதவன்
உன் நேசத்தால் மனமாறி போனேன்…!
சிகரமாய் எடுத்துவைக்கிறேன் என் முதல் அடியை
பாடசாலையை எட்டி பார்க்காதவளாயிருந்த
உன்னை அரசியாய் அமரவைத்து கௌரவித்தேன்…!
உன் அன்பில் உருக்கி போனேன்
நீ என் மீது கொண்ட ஆழமான காதலால்…!
இனி உன் வாக்கே என் செயல்
உன் வழியே என் வழி..
அடிமையானேன் அன்பென்றிட உன்வழிக்கு…!
பேசிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை
பேசாதது எதுவுமில்லை
பேச்சைக்கேட்க தாராளமுண்டு…!
இருக்கரங்களிலோ நிறைந்த நேரமுண்டு
கரங்களுக்கு எட்டிய தூரமும்முண்டு
நின்று பேசத்தான் நேரமில்லையோ…!
உன் அன்பில்
நேரமில்லையென்றால்
நீ என்னைத் தவிர்க்க வைக்கிறது தானா உன் மெய்யான காதலின் மொழிகளா…!
நித்தமும் ஏங்கி ஏங்கி வைத்தே
என் புண்பட்ட மனங்களை ஏன் கொல்கிறாய்…!
நீ இல்லாதிருப்பதை விட
வலிகளை கொடுத்து விட்டு
உன் இருதயத்தை மீண்டும்
எடுத்துச் செல்வது உனக்கு
வலிக்கவில்லையா...?
நான் உன்னிடம் கேட்பது ஏதுமில்லை
நீ என்னருகில் இல்லாதப்போதும்
உன் வசம் முழுவதும் என்னுள்ளத்தில்
இருப்பதுப்போன்ற ஒரு உணர்வு…!
அன்பே வந்துவிடு என்னோடு
நேரம் மிகவும் சொச்சமாகவும் மிச்சமாகவும் வைத்து காத்திருக்கிறேன் உன் வருகையை நோக்கி…!
காதலென்ற உணர்வை உணர்த்த வைத்துவிட்டு,
ஏன்
என் இருதயத்தை கொள்ளையடித்து
விட்டுச் சென்றாய்…!
உன் அன்பை கொஞ்சமாய் கொடுத்து விட்டு
என்னிடம் மொத்தமாய் கொள்ளையடித்துவிட்டு
சென்றாயே…!
உன் அழகை பங்கு போடுவதை விட,
உன் அன்பை பங்கு போடுவதற்கு நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன்..
நீ ஏன்
கொடுத்துவிட்டு எடுத்துப்போனாய்
என் வலிகளின் ஓசை கேட்கிறதா அன்பே உனக்கு…!
மன சஞ்சாரத்தில் இருக்கும்போது உன் அன்பை எதிர்பார்த்து ஏங்கியே
வலியோடு வாழ்கிறேன் அனுதினம்
அதனின் வலிகள் தான் கொடுமையானது என்னவோ…!
காய்க் கொடுக்கும் மலர்கள்
நிறைந்தச் செழிப்போடு நிற்கும்
மரத்தினை வேரோடு பிடுங்கிச் சாயும்போது
நாம் பிறந்த பூமியும் மரமும் கொள்ளும்
தவிப்பென்ன,
அதனின் வலிகள் தான் நீளமெத்தனை ஏனோ?
இவையெல்லாம் அன்புக்கொண்ட
மனங்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளும்…!
என்றாவது ஒரு நாள் நீ உணர்ந்து கொள்வாய்
என் அன்பில் விலை என்னவென்று…!
என் அன்புக்காய் மட்டுமே
உன் அன்பை கொஞ்சி கெஞ்சிக்கேட்கிறேன்.
நீ கொடுக்கும் ஒரு மடங்கு அன்பில் திளைத்து நான் வாழ்வேன் பல கோடி ஜென்மங்களில்…!
© ER.RANJITHA DHARA
விழிச்சொல்லுமென்றால்
நான் சொன்னது நிஜமென்று
கூறு நீ...
மனம் விட்டு பேசித்தீர்க்க ஏராளம் உண்டெனில்
பேசத்தெரியாதவையோ
அதை முன்னேக் கூறிவிடுவது நன்று..!
உன்னோடு உரையாட
கரங்களைக் கோர்த்துக்கொள்ள
வேண்டாம்
வெறும் உன்யிமையின் பார்வையொன்றுப்
போதுமே..!
வார்த்தைகளில் வேண்டாமே நம் காதல்..
பார்வையை பரிமாற்றி மௌனமாய்
விரல்களிரண்டும் கோர்த்துப் பயணம் செய்வோமே..
என் புண்ணான மனதை
உன் அழகிய கண்ணக்குழி புன்னகையால்
ஆற வை நீ..
என்னுள்ளத்தில் இருக்கும் காயத்தின் வலியை ஆற்ற
உன் இரு இமையின் அசைவொன்றே போதுமே…!
தாலாட்டு தென்றலே நீ
பிழைநீங்கி உரையாடுவாயோ தன்மொழியை…!
அடங்க மறுத்தவனை
அகந்தை கொள்ளவைத்தவள் நீ..
உன் உள்ளத்தின் நிறைந்த நேசத்தால்…!
அடங்கிப் போனேன்
உன் அன்பென்ற ஒன்றை
இதழ் முத்தத்தில்…!
அத்தனையும் எளிதில் அடங்காதவன்
உன் நேசத்தால் மனமாறி போனேன்…!
சிகரமாய் எடுத்துவைக்கிறேன் என் முதல் அடியை
பாடசாலையை எட்டி பார்க்காதவளாயிருந்த
உன்னை அரசியாய் அமரவைத்து கௌரவித்தேன்…!
உன் அன்பில் உருக்கி போனேன்
நீ என் மீது கொண்ட ஆழமான காதலால்…!
இனி உன் வாக்கே என் செயல்
உன் வழியே என் வழி..
அடிமையானேன் அன்பென்றிட உன்வழிக்கு…!
பேசிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை
பேசாதது எதுவுமில்லை
பேச்சைக்கேட்க தாராளமுண்டு…!
இருக்கரங்களிலோ நிறைந்த நேரமுண்டு
கரங்களுக்கு எட்டிய தூரமும்முண்டு
நின்று பேசத்தான் நேரமில்லையோ…!
உன் அன்பில்
நேரமில்லையென்றால்
நீ என்னைத் தவிர்க்க வைக்கிறது தானா உன் மெய்யான காதலின் மொழிகளா…!
நித்தமும் ஏங்கி ஏங்கி வைத்தே
என் புண்பட்ட மனங்களை ஏன் கொல்கிறாய்…!
நீ இல்லாதிருப்பதை விட
வலிகளை கொடுத்து விட்டு
உன் இருதயத்தை மீண்டும்
எடுத்துச் செல்வது உனக்கு
வலிக்கவில்லையா...?
நான் உன்னிடம் கேட்பது ஏதுமில்லை
நீ என்னருகில் இல்லாதப்போதும்
உன் வசம் முழுவதும் என்னுள்ளத்தில்
இருப்பதுப்போன்ற ஒரு உணர்வு…!
அன்பே வந்துவிடு என்னோடு
நேரம் மிகவும் சொச்சமாகவும் மிச்சமாகவும் வைத்து காத்திருக்கிறேன் உன் வருகையை நோக்கி…!
காதலென்ற உணர்வை உணர்த்த வைத்துவிட்டு,
ஏன்
என் இருதயத்தை கொள்ளையடித்து
விட்டுச் சென்றாய்…!
உன் அன்பை கொஞ்சமாய் கொடுத்து விட்டு
என்னிடம் மொத்தமாய் கொள்ளையடித்துவிட்டு
சென்றாயே…!
உன் அழகை பங்கு போடுவதை விட,
உன் அன்பை பங்கு போடுவதற்கு நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன்..
நீ ஏன்
கொடுத்துவிட்டு எடுத்துப்போனாய்
என் வலிகளின் ஓசை கேட்கிறதா அன்பே உனக்கு…!
மன சஞ்சாரத்தில் இருக்கும்போது உன் அன்பை எதிர்பார்த்து ஏங்கியே
வலியோடு வாழ்கிறேன் அனுதினம்
அதனின் வலிகள் தான் கொடுமையானது என்னவோ…!
காய்க் கொடுக்கும் மலர்கள்
நிறைந்தச் செழிப்போடு நிற்கும்
மரத்தினை வேரோடு பிடுங்கிச் சாயும்போது
நாம் பிறந்த பூமியும் மரமும் கொள்ளும்
தவிப்பென்ன,
அதனின் வலிகள் தான் நீளமெத்தனை ஏனோ?
இவையெல்லாம் அன்புக்கொண்ட
மனங்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளும்…!
என்றாவது ஒரு நாள் நீ உணர்ந்து கொள்வாய்
என் அன்பில் விலை என்னவென்று…!
என் அன்புக்காய் மட்டுமே
உன் அன்பை கொஞ்சி கெஞ்சிக்கேட்கிறேன்.
நீ கொடுக்கும் ஒரு மடங்கு அன்பில் திளைத்து நான் வாழ்வேன் பல கோடி ஜென்மங்களில்…!
© ER.RANJITHA DHARA