...

5 views

காதல் (LOVE)

© நாவல்

[#காதல் part 7

ஜாஸ்மீன காப்பாற்ற என்ன வேணாலும் செய்ய தயார் என்று தீபக் கூறினான்.

நீயும் ஜாஸ்மீனும் கல்யாணம் பன்னிக்கனும் அப்போ தான் நம்ம ஜாஸ்மீன உயிரோட காப்பாற்ற முடியும் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிடமே ரெண்டு பேரும் ஊரவிட்டே போய்யிரனும் எல்லா பிரச்சினையும் முடிக்க இதுதான் வழி என்று கௌதம் சொன்னான்.

எனக்கு சம்மதம் தான் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க பெங்களூர் போய்ரோம் அங்கே என்னுடைய நண்பர்கள் இருக்காங்க போலீஸ் பழக்கமும் இருக்கு ஜாஸ்மீன் குடும்பத்துல இருந்து யார் வந்தாலும் அங்கே பிரச்சினை செய்ய முடியாது நாங்க பாதுகாப்பா இருப்போம் என்று தீபக் சொல்லி விட்டு கல்யாணத்திற்கும் சம்மதித்தான்.

அதே சமயம் வெளிநாட்டில் தொழில் விஷயமாக சென்ற தீபக் அப்பா இரண்டு நாட்களில் திரும்பி வருவதாக தீபக்கிற்கு போன் செய்து தகவல் கூறினார்.

அப்பா வருவதற்குள் எங்க கல்யாணம் முடிஞ்சாகனும் இல்லன அவரோட செல்வாக்க பயன்படுத்தி ஜாஸ்மீன் குடும்பத்தையே அழிச்சுருவாரு என்று பயத்துடன் கௌதமிடம் சொன்னான் தீபக்.

சரி தீபக் நீ மருத்துவமனையில் இருக்க வேணாம் வீட்டுக்கும் போகாத ஏதாவது ஹோட்டலில் தங்கு இல்லன ஜாஸ்மீன் அண்ணன்கள் உன்ன தேடி கண்டுபிடிச்சு ஏதாவது செஞ்சுருவாங்க,
நாளைக்கு உனக்கும் ஜாஸ்மீன்க்கம் ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் என்று கௌதம் கூறினான்.

தீபக்கும் சரி என்று சொல்லி விட்டு ஜாஸ்மீன எப்படி கூட்டிட்டு வரபோறிங்க என்று கேட்டான்.

அதுக்கு ஒரு வழி இருக்கு நான் அதை பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு கீர்த்தனாவ கூட்டிட்டு ஜாஸ்மீன் வீட்டுக்கு சென்றான் கௌதம்.

ஜாஸ்மீன்னை வெளியே அனுப்ப சொல்லி அவளுடைய வீட்டில் கல் எறிந்து பிரச்சினை செய்தான் கௌதம்.
வீட்டில் உள்ள அனைவரும் வெளியே வந்து கௌதமை அடித்தனர்.
அதே சமயம் வீட்டின் பின்புறம் இருக்கும் வாசல் வழியாக உள்ளே வந்து ஜாஸ்மீன்னை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து காப்பாற்றி வெளியே கூட்டிட்டு வந்து தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாக அங்கிருந்து சென்றாள் கீர்த்தனா.

குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் சரியாக முடியவும் கௌதமும் அங்கிருந்து ஓடிவிட்டான்.

ஜாஸ்மீன்னை அழைத்து வந்து தன்னுடைய தோழி என்று பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறையில் உட்கார வைத்து விட்டு நாளை உனக்கும் தீபக்கிற்கும் கல்யாணம் அதுக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்ன காப்பாற்றி கூட்டிட்டு வந்திருக்கோம் என்று கீர்த்தனா கூறினாள்.

கௌதம் தனக்காக வீட்டில் உள்ளவர்களிடம் அடி வாங்கியதை நினைத்து ஜாஸ்மீன் ரொம்பவும் வேதனையோடு அழுதாள்,
கீர்த்தனா அவளை சமாதானம் செய்து அவளுடைய காயங்களுக்கு மருந்து போட்டுவிட்டு ஓய்வு எடுக்க சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்.

அதே சமயம் ஜாஸ்மீன் வீட்டில் இல்லை ஓடி விட்டாள் என்று தெரிந்ததும் அவளுடைய வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை பார்த்த இடத்திலே வெட்டி கொல்ல கிளம்பினார்கள்.
முதலில் தீபக்கின் வீட்டிற்கு சென்று அவனை கொல்ல தேடினார்கள் தீபக்கும் இல்லை ஜாஸ்மீனும் இல்லை
என்ன செய்வது என்று புரியாமல் வெறியோடு கௌதம் வீட்டிற்கு சென்றார்கள்.

ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே தன்னுடைய பெற்றோர்களை பாதுகாப்பாக வேறு ஊருக்கு அனுப்பி விட்டான் கௌதம்.

அவர்கள் அனைவரும் கொலை வெறியோடு தேடிட்டு இருந்தார்கள்.

அதே சமயம் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் கௌதம்.

மறுநாள் கல்யாணத்திற்காக ஜாஸ்மீன்னை அலங்காரம் செய்து தயார் படுத்தி கொண்டிருந்தாள் கீர்த்தனா.

(இவர்கள் வாழ்க்கையவே திருப்பி போட போகிறது விதி)

PART 8
[#காதல் part 8

ஜாஸ்மீன்,கீர்த்தனா இருவரும் கிளம்பி பாதுகாப்பாக ரிஜிஸ்டர் ஆபிஸிக்கு வந்து சேர்ந்தனர்.
கௌதமும் மாலை வாங்கிட்டு சாட்சி கையெழுத்து போட தன்னுடைய காலேஜ் நண்பர்கள் சில பேருடன் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து சேர்ந்தான்.
அனைவரும் பதற்றத்துடன் தீபக்கிற்க்காக காத்திருந்தனர்,
ஆனால் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் தீபக் வரவே இல்லை.
ஏதோ தப்பாக இருக்கிறது என்று கௌதமிற்கு தோன்றியது.

கீர்த்தனாவை தனியாக அழைத்து நான் போய் தீபக்க பார்த்து கையோடு கூட்டிட்டு வரேன் அது வரைக்கும் நீ ஜாஸ்மீன் கூடவே எந்தவொரு காரணத்துக்கும் ஆபிஸிக்கு வெளியே நீயும்,ஜாஸ்மீனும் வரவே கூடாது என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் கௌதம்.

தீபக் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவன் இருந்த அறையை திறந்தான் கௌதம்.
அறைக்குள் அனைத்து பொருட்களும் உடைந்த நிலையில் கிடந்தது.
அறைக்குள் தீபக் இல்லை ஆனால் யாரையோ அடித்து தரையில் இழுத்து சென்றதுக்கு அடையாளமாக இரத்த கறைகள் தரையில் இருந்தன.
அந்த இரத்த கறையை பின் தொடர்ந்தே சென்றான் கௌதம்.
இறுதியில் அந்த இரத்த கறை அறையில் உள்ள ஜன்னல்க்கு பக்கத்தில் முடிந்தது.
வேகமாக ஓடிச்சென்று ஜன்னல்க்கு வெளியே எட்டிப்பார்த்தான் கௌதம்.

அங்கே பயங்கரமாக அடிப்பட்டு கை,கால் உடைந்து இரத்த வெள்ளத்தில் கால்வாசி உயிரோடு ஜன்னல்க்கு வெளியே தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சென்றிந்தார்கள் ஜாஸ்மீனின் அண்ணன்கள்.
இதை பார்த்ததும் பதறிக்கொண்டு ஹோட்டலில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து ஆம்புலன்ஸ்யை வரவழைத்து தீபக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் கௌதம்.

அதே சமயம் கல்யாண நேரம் தாண்டி போகுது பையன் எப்போ தான் வருவாரு என்று ரிஜிஸ்டர் ஆபிஸில் அதிகாரி கத்த தொடங்கினார்.
அந்த ஆளுக்கு நிலைமையை சொல்லி இருக்க வைக்க பேசி சமாளித்துக்கொண்டிருந்தாள் கீர்த்தனா,

அப்போதுதான் நடந்ததை சொல்ல கீர்த்தனாவிற்கு போன் செய்தான் கௌதம்.
ஆனால் கீர்த்தனா அதிகாரியை சமாதான படுத்தி பேசிக்கொண்டிருந்தாள், அதனால அந்த போன்னை ஜாஸ்மீன் எடுத்து கௌதமிடம் பேசினாள்.

கீர்த்தனா தான் பேசுகிறாள் என்று பதற்றதில் நடந்த அனைத்தையும் ஜாஸ்மீனிடம் சொல்லி விட்டான் கௌதம்.

இதையெல்லாம் கேட்டதும் அந்த அலுவலகமே அதிரும் அளவிற்கு கதறி அழுதாள் ஜாஸ்மீன்.

என்ன ஆச்சு என்று பதற்றத்தோடு ஓடி வந்து கேட்டாள் கீர்த்தனா.
நடந்த அனைத்தையும் அழுது கதறிக்கொண்டே சொன்னாள் ஜாஸ்மீன்.

அனைவரும் அதிர்ச்சியுடம் அழுதனர்.
ஜாஸ்மீன்னை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டு தீபக்கிற்கு எதுவும் ஆகாது நம்ம போய் பார்க்கலாம் என்று கீர்த்தனா சொல்லி அழுதாள்.

மீண்டும் கௌதம், கீர்த்தனாவிற்கு போன் செய்து நீங்க யாரும் மருத்துவமனைக்கு வராதிங்க தீபக் அடிச்சு போட்டா அவனை பார்க்க ஜாஸ்மீன் வருவாள் அவளை பிடிச்சறலாம் இதுதான் அவ அண்ணன்கள் திட்டமா இருக்கும்.
அதனால ஜாஸ்மீன கூட்டிட்டு நீ உன்னோட வீட்டுக்கு பாதுகாப்பா போய்யிரு என்று கீர்த்தனாவிடம் சொல்லி விட்டு போன்னை வைத்தான் கௌதம்.

இதையெல்லாம் கேட்டுட்டு வீட்டுக்கு போகலாம் என்று ஜாஸ்மீன்னை கூப்பிட்டாள் கீர்த்தனா.
இல்ல என்ன ஆனாலும் பரவால நான் தீபக்க பார்த்தே ஆகனும் என்று சொல்லிகிட்டே அங்கிருந்த பைத்தியம் பிடித்தது போல் வெளியே ரோட்டிற்கு ஓடி வந்தாள் ஜாஸ்மீன்.

இரு வெளியே போகாதே என்று கத்திக்கொண்டு பின்னாடியே ஓடி வந்தாள் கீர்த்தனா.

ஆனால் யாருமே எதிர்ப்பார்க்கத நிகழ்வாக ரோட்டிற்கு ஓடி வந்த ஜாஸ்மீன் அங்கு வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலே இறந்து போனாள்.

(இதற்கு மேல் நடக்க போகும் அனைத்தும் வாழ்க்கையின் திருப்பங்கள் தான்)

PART9
[#காதல் part 9

உயிர் பிரியும் போது தன்னுடைய காதல் வாழ்க்கையில் தீபக்குடன் மகிழ்ச்சியுடன் இருந்த அந்த நாட்களை நினைத்த படியே கண்களை மூடினாள் ஜாஸ்மீன்.

இறந்து போன ஜாஸ்மீனின் உடலை தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதாள் கீர்த்தனா.

போலீஸ்காரர்கள் அந்த இடத்திற்கு வந்து ஜாஸ்மீனின் உடலை அங்கிருந்து எடுத்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கீர்த்தனாவிடம் ஜாஸ்மீன் பற்றிய விவரங்கள் அனைத்தும் வாங்கிக்கொண்டு ஜாஸ்மீனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஜாஸ்மீன் உடலை எடுத்துட்டு போனதும் கௌதமிற்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறினாள் கீர்த்தனா.

ஜாஸ்மீன் இறந்ததை கேட்டதும் கதறி அழுதான் கௌதம்.
நீ மருத்துவமனைக்கு போ ஜாஸ்மீன் குடும்பம் வந்ததும் அவங்க கண்ணுல படாமல் தீபக்க அட்மிட் பன்னிருக்க மருத்துவமனைக்கு வந்துரு உன்ன அவ குடும்பத்துல யாராவது பார்த்துட்டா பெரிய பிரச்சினை ஆகிரும் என்று கீர்த்தனாவிடம் சொல்லி விட்டு போன்னை வைத்தான் கௌதம்.

கௌதம் சொல்லியது போல் ஜாஸ்மீன் குடும்பம் வந்ததும் அங்கிருந்து கிளம்பி தீபக்கை சேர்த்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் கீர்த்தனா.

தீபக்கிற்கு எப்படி இருக்கு டாக்டர் என்ன சொன்னாங்க என்று கீர்த்தனா கேட்டாள்.

தலையில் பலமா அடி அதுனால இப்போ வரைக்கும் சுயநினைவு இல்லாமல் தான் இருக்கான்,
நாளைக்குள்ள சுயநினைவு வந்திரும்னு டாக்டர் சொல்லிருக்காங்க
கண் முழிச்சு ஜாஸ்மீன் எங்கேனு தீபக் கேட்கும் போது அவ இனிமேல் திரும்பி வர மாட்டாள்னு நான் எப்படி அவன் கிட்ட சொல்லுவேன்னு கீர்த்தனாவின் கையை பிடித்துக்கொண்டு அழுதான் கௌதம்.

நீ ரொம்ப நேரம் இங்கே இருக்க வேணாம் தீபக் அப்பா நாளைக்கு காலையில இங்கே வந்திருவாரு அவர் வந்ததும் பேசிட்டு நான் ஜாஸ்மீன் வீட்டுக்கு வரேன்
இப்போ கிளம்பி நீ உன் வீட்டுக்கு போ என்று கீர்த்தனாவை அனுப்பி வைத்தான் கௌதம்.

மறுநாள் தீபக் அப்பா வரவும் அவர்கிட்ட எதுவும் உண்மையை சொல்லி பிரச்சினையை பெருசு பன்னாமல் காரில் போகும்போது விபத்து நடத்திருச்சுனு சொல்லிட்டு தீபக்க அவர் அப்பாகிட்ட ஒப்படைச்சுட்டு அங்கிருந்து கிளம்பி ஜாஸ்மீனின் சாவிற்கு வந்தான் கௌதம்.

கௌதமை பார்த்ததும் அவன்தான் நம்ம பொண்ண கூட்டிட்டு போய் கொன்னுட்டான் சொல்லி ஜாஸ்மீன் வீட்டார்கள் கௌதமை அடித்தனர்.
அதே சமயம் தன்னுடைய தோழி இறந்துவிட்டதாக சொல்லி தன் பெற்றோர்களுடன் சாவு வீட்டிற்கு வந்தாள் கீர்த்தனா.
கௌதம் அடி வாங்குவதை பார்த்து பதறி போய் தன் பெற்றோர்கள் இருப்பதையும் மறந்து ஓடி போய் கௌதமை கட்டிப்பிடித்துக்கொண்டு அடிக்காதிங்க என்று கதறினாள் கீர்த்தனா.

பிரச்சினை தெரிந்து போலீஸ்காரர்கள் வந்து கௌதமை காப்பாற்றி அங்கிருந்து பாதுகாப்பாக கூட்டிச் சென்றார்கள்.

கீர்த்தனா நடந்துக்கொண்ட விதத்தினை வைத்தே அவள் கௌதமை காதல் செய்கிறாள் என்பது அவளுடைய அப்பாவிற்கு தெரிந்தது.
என்னுடைய தகுதிக்கு ஒன்னும் இல்லாத பிச்சைக்கார பையன் மாப்பிள்ளையா ஏதாவது செய்யனும் என்று சாவு வீட்டில் உட்கார்ந்து மனதுக்குள் தன்னுடைய நஞ்சு புத்தியால் சிந்தித்து கொண்டிருந்தார்.

அதே சமயம் தீபக் காதலித்த பொண்ணோட வீட்டார்கள் தான் தன்னுடைய பையனை சாகுற அளவுக்கு அடித்துள்ளார்கள் என்பது அந்த ஹோட்டலில் உள்ளவர்கள் தீபக் அப்பாவிடம் சொல்லி விட ஜாஸ்மீன் குடும்பத்தையே தீர்த்துக்கட்ட தன் செல்வாக்கினை பயன்படுத்தி கொலை செய்ய கூடிய எல்லா ரவுடிகளையும் வரவழைத்தார்.

(ஜாஸ்மீன் குடும்பத்தின் கதி என்னவாக போகிறது?
கௌதம்,கீர்த்தனா காதல் என்ன ஆக போகிறது?)

PART 10
[#காதல் part 10

ஜாஸ்மீன் இறுதி சடங்கு நடந்து முடிந்தது.

கௌதமை நீ லவ் பன்னுறியா என்று கீர்த்தனாவிடம் கேட்டார் குருதேவ்.

கொஞ்சமும் பயம் இல்லாமல் ஆமாம் என்று சொன்னாள் கீர்த்தனா.

கௌதமிடம் பேசனும் அவனை வீட்டுக்கு வர சொல் என்று கீர்த்தனாவிடம் கூறினார் குருதேவ்.

இப்போ தான் கௌதம் தோழி ஜாஸ்மீன் இறந்தாள்.
அவன் அந்த கவலையில் இருந்து வெளியே வருவதற்கே ஒரு 4 நாட்களாது ஆகும்
அப்படியிருக்கும் போது இந்த சூழ்நிலையில் நீங்க கௌதமை பார்த்து பேசினால் எப்படி அவன் பேசுவான் எனக்கு ஒரு வாரம் கால அவகாசம் குடுங்க நான் கண்டிப்பா கௌதமை கூட்டிட்டு வரேன்னு கீர்த்தனா கூறினாள்.

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த குருதேவ் அதன் பிறகு தன்னுடைய முடிவை கீர்த்தனாவிடம் கூறினார்.
சரி அவன் ஜாஸ்மீன் இறந்த கவலையில் இருந்து வெளியே வரட்டும் அதுக்காக ஒரு வாரம் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது.
இரண்டு நாட்கள் தான் டைம் அதுக்குள்ள அவனை எங்கிட்ட பேச நீயே கூட்டிட்டு வரனும் இதுதான் என்னுடைய முடிவு என்று சொல்லி விட்டு ஆபிஸிக்கு கிளம்பி சென்றார் குருதேவ்.

என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தாள் கீர்த்தனா.
அதற்கு காரணம் ஜாஸ்மீன்க்கு நடந்த கோர விபத்தின் அதிர்ச்சியில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள் கீர்த்தனா.

போலீஸ் விட்ட பிறகு நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான் கௌதம்.

கௌதமை பார்க்க விடுதிக்கு வந்து வெளியே காத்திருந்தாள் காத்திருந்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா காத்திருப்பதை விடுதியின் வாட்ச்மேன் கௌதமிடம் சொல்லவும் அவளை பார்க்க கிளம்பி கீழே சென்றான் கௌதம்.

இருவரும் கிளம்பி முதலில் தீபக்கை பார்க்க மருத்துவமனைக்கு சென்றனர்.

தீபக் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தான்.
தீபக் அப்பாவின் ஆட்கள் தான் மருத்துவமனையில் இருந்தனர் தீபக் அப்பாவை பார்க்க முடியவில்லை.
அதன் பிறகு அங்கிருந்த டாக்டரிடம் தீபக் உடல் நிலையை கேட்டு தெரிந்து கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பி சென்றனர்.

ஒரு ஹோட்டல்க்கு போய் இருவரும் ஜீஸ் ஆர்டர் செய்து விட்டு நடந்த நிகழ்வுகளை நினைத்து வருத்ததுடன் உட்கார்ந்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து தன்னுடைய அப்பா சொன்ன அனைத்தையும் சொல்லி விட்டு இரண்டு நாட்களில் நம்ம காதலை பற்றி என் அப்பா கிட்ட பேசி நீ சம்மதம் வாங்கனும் என்று கௌதமிடம் சொல்லி முடித்தாள் கீர்த்தனா.

நேற்று தான் ஜாஸ்மீன் இறந்தாள் அந்த அதிர்ச்சியில் இருந்து நான் வெளியே வரவே எவ்வளவு நாள் ஆகும் தெரியாது.
இப்போ என் மனசு முழுவதும் கவலை மட்டும் தான் ரணமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் உன் அப்பாகிட்ட எப்படி என்னால சாதாரணமாக பேசி சம்மதம் வாங்க முடியும் என்று கௌதம் கேட்டான்.

உன் சூழ்நிலை புரியுது கௌதம் உனக்காக எல்லா விவரங்களையும் சொல்லி என் அப்பாகிட்ட நான் எவ்வளவோ பேசி பார்த்தேன்.
ஆனால் அவரு ரெண்டு நாட்களில் உன்ன சந்திக்கனும் சொல்லிட்டாரு என்று கண் கலங்கிய படி தன்னுடைய நிலைமையை கூறினாள் கீர்த்தனா.

ஒருவன் சராசரி மனநிலையில் இல்லாத போது உடனே பேசனும் என்று கூப்பிடும் போதே தன்னுடைய உணர்ச்சிகளோடு விளையாடி காதலை வேண்டாம் என்று சொல்ல தான் என்பது கௌதமிற்கு தெளிவாக பிரிந்தது.
இருந்தாலும் கீர்த்தனாவின் நிலைமையை பார்த்து தான் வந்து பேசுவதாக கௌதம் கூறினான்.

ஆனால் தன்னுடைய காதலி முன்பு ஒரு காதலன் எந்தவொரு சூழ்நிலையிலும் அசிங்க படவோ அடி வாங்கவோ கூடாது என்று தான் நினைப்பான்.
இதற்கு மேலே ஒரு பெரிய சம்பவத்தை தன் காதலி முன்பு கௌதம் சந்திக்க போகிறான் என்பது பாவம் அவர்களுக்கு அப்போது தெரியாது.

PART 11
[#காதல் part 11

கீர்த்தனா அப்பாவை பார்க்க மறுநாளே தயாராகி குருதேவ்வின் வீட்டிற்கு சென்றான்.

அதே சமயம் தீபக்கின் அப்பா விஸ்வநாத் முன்பே திட்டம் போட்டப்படி தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி கொலை செய்ய கூடிய கூலிப்படைகளை ஜாஸ்மீன் குடும்பத்தில் உள்ளவர்களை கொல்வதற்கு வரவழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

தன்னுடைய அப்பா விஸ்வநாத்தின் மொத்த திட்டத்தையும் மயங்கிய நிலையில் இருந்த தீபக்கின் காதுகளில் கேட்கவே அப்போது தான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.

அதே சமயம் கீர்த்தனாவின் வீட்டிற்கு வெளியே செருப்பினை போட்டுவிட்டு உள்ளே சென்றான் கௌதம்.

கௌதமை பார்த்ததும் வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்று சொன்னார் குருதேவ்.

குருதேவ்,கௌதம்,கீர்த்தனா மூவரும் சாப்பிட தொடங்கினார்கள்.
அப்போது தான் குருதேவ் பேச தொடங்கினார்.
அப்புறம் கௌதம் வரும்போதே வெறும் கால்ல தான் நடந்து வந்தியா என்று குருதேவ் கேட்டார்.

இல்ல சார் செருப்பு போட்டு தான் வந்தேன்.
வீட்டுக்குள்ள செருப்போட வர கூடாதுல சார் அதான் வெளியே கலட்டி போட்டு உள்ளே வந்தேன் என்று கௌதம் சொன்னான்.

ஓகே, வீட்டுக்குள்ள செருப்பு போட்டு வர கூடாது ஏனா அந்த செருப்பு மிதிச்சு வர கூடிய இடங்கள் எல்லாமே ரொம்பவும் கேவலமா இருக்கும்.
அதுவே நாங்க சூ போட்டு வீட்டுக்குள்ள நடக்கிறமே அது ஏன் தெரியுமா.
நாங்க எல்லாம் பேசி பலகி போய்ட்டு வர கூடிய இடங்கள் எல்லாம் அவ்வளவு சுத்தாமா இருக்கும்,
என் மகள் கீர்த்தனாவுக்கு நீ பொருத்தமான ஆளா இல்லையானு ஒரு சாதாரண செருப்பே உனக்கு புரிய வச்சுருக்குமே என்று கீர்த்தனா முன்பே கௌதமை அசிங்க படுத்தினார் குருதேவ்.

நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான் சார்.
சூ போட்டுட்டு போற பெரிய பணக்கார மனுஷனுங்க எல்லோரும் நல்ல இடத்துல பிறந்த சுத்தமான இடத்துக்கு மட்டும்தான் போய்ட்டு வரவோம் அதனால தான் நீங்க வீட்டுக்குள்ள சூ போட்டு நடக்கிறோம் சொல்லுறிங்களே அப்போ நீங்க போட்டுட்டு இருக்க சூ சுத்தமானதா சார் என்று கௌதம் கேட்டான்.

ஆமாம் கண்டிபா என்னுடைய சூ சுத்தமானது தான் அதனால வீட்டுக்குள்ள நான் சூ போட்டு உட்கார்ந்திருக்கேன்.
நீ உன்னுடைய தகுதி செருப்பளவு என்பதால் தான் என் முன்னாடி வெறும் கால்ல உட்கார்ந்திருக்க என்று குருதேவ் கூறினார்.

தயவுசெய்து இப்படியெல்லாம் பேசாதிங்க அப்பா என்று கீர்த்தனா கெஞ்சினாள்.

சரி சார் நாங்க மதிப்பற்ற செருப்பு தான் நீங்க மதிப்போட இருக்க சூ தான் ஆனா சுத்தமா இருக்க உங்க சூ கலட்டி, உங்க நாக்கால நக்கி காட்டுங்க
சூ போட்டு இருக்கிற பணக்காரங்க எல்லாம் சுத்தமானவங்கனு நான் முழுசா ஒத்துக்கிறேன் என்று மிகவும் சாதாரணமாக சொன்னான் கௌதம்.

உனக்கு என்னாடா தகுதி இருக்கு என்னுடைய பொண்ண காதல் செய்ய என்று கோபமாக பேச தொடங்கினார் குருதேவ்.

உங்கள மாதிரி செருப்ப வச்சு மனுஷன மதிக்கிற கீழ் தனமான புத்தி எனக்கு கிடையாது இந்த ஒரு தகுதி போதும் நாங்க உங்கள விட பெரிய இடத்துல இருக்கேன்னு நிருபிக்க என்று கௌதமும் கோபமாக பேச தொடங்கினான்.

இருவரையும் சமாதானம் செய்ய முடியாமல் கீர்த்தனா அழுதுக்கொண்டிருந்தாள்.

உன்னுடைய சூ வெளியே அழகா தெரிந்தாலும் அதுக்குள்ள எவ்வளவு அழுக்கு இருக்கு
அந்த மாதிரி தான் பணக்காரனுங்க வெளியே அழகா தெரிந்தாலும் அவனுங்க சிந்தனையும்,செயலும் மலத்திற்கு சமமாக இருக்கும்.
வெளியே கலட்டி போட்டா தான் அது செருப்பு.
அதயே வீட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன்னு பெருமையா சொல்லுறிங்களே சார் அந்த சூ என்ன உங்க பொண்டாட்டியா வீட்டுக்குள்ள வரைக்கும் போட்டுட்டு சுத்துவேன்னு சொல்ல.

PART 12
[#காதல் part 12

கௌதம் பேச பேச கீர்த்தனாவின் அப்பாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது உன்னையெல்லாம் வீட்டுக்குள் விட்டு எனக்கு சமமாக உட்கார வைத்து சாப்பாடு போட்டு பேசியது என்னுடைய தப்பு தான் என் பொண்ணு பக்கம் உன்னுடைய நிழல் பட்டாலும் உன்னை கொன்றுவேன் என் வீட்டில் நிற்க கூட ஒரு தகுதி இருக்கு உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கு அந்த தகுதி கிடையாது வெளியே போடா நாயே என்று கௌதமை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் குருதேவ்.

இவ்வளவு தான் உங்களுடைய புத்தி உங்ககிட்ட இருக்க பணம் ஒரு நாள் என்கிட்டயும் வரும் சார்.
ஆனா அப்போவும் நான் செருப்ப வீட்டுக்கு வெளியே தான் கழட்டி போட்டுட்டு போவேன் பணம் வந்துருச்சுனு சொல்லி அந்த செருப்ப தூக்கி தலையில வச்சுக்க மாட்டேன் என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் கௌதம்.

எல்லாம் முடிந்துவிட்டது போல இனிமேல் என்ன செய்ய போகிறேன் என்னுடைய காதல் கை கூடவில்லையே என்று அழுது புலம்பினாள் கீர்த்தனா.

தன்னுடைய தோழி இறந்த சோகம் ஒரு பக்கம்
தீபக்கிட்ட ஜாஸ்மீன் இறந்த விஷயத்தை சொல்லி எப்படி அவனை தேற்றுவது என்கிற குழப்பம் ஒரு பக்கம்
இது எல்லாம் பத்தாது என்று எனக்கு ஆறுதலாக இருந்த என்னுடைய காதல் இன்று இல்லாமலே போய்விட்டது என்கிற மிகப்பெரிய மன வேதனை ஒரு பக்கம் என்று பல குழப்பங்களோடு தீபக் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றான் கௌதம்.

தீபக் சுயநினைவுக்கு வந்ததை டாக்டர் கௌதமிடம் கூறினார்.

உடனே தீபக்கை பார்க்க வேகமாக ஓடினான் கௌதம்.

கௌதமை பார்த்ததும் தீபக் கேட்ட முதல் கேட்ட ஜாஸ்மீன் எப்படி இருக்கிறாள் என்பது தான்.

கண் கலங்கியபடி வாயில் இருந்து வார்த்தைகளை சொல்ல முடியாமல் மிகவும் சிரம பட்டு ஜாஸ்மீன் இறந்ததை தீபக்கிடம் கூறி நடந்த அனைத்து பிரச்சினைகளையும் சொல்லி முடித்தான் கௌதம்.

ஜாஸ்மீன் இறந்த விஷயத்தை கேட்டதும் கூர்மையான கத்தியினை வைத்து நெஞ்சில் குத்தி இயத்தின் இரத்த குழாயை அறுத்து எடுத்தது போல் இருந்தது தீபக்கிற்கு
அதிகமாக மனதளவில் துக்கப்பட்டத்தில் தீபக்கிற்கு தலையில் அடிப்பட்ட காயத்தில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

இதைப்பார்த்ததும் உடனே டாக்டர்களை கூப்பிட்டு பார்க்க சொன்னான் கௌதம்.

டாக்டர்கள் இரத்த கசிவை சரி செய்த சென்ற பிறகு கௌதமை அழைத்து தன்னுடைய அப்பா ஜாஸ்மீன் குடும்பத்தை இன்னைக்கு ராத்திரி கொலை செய்வதற்கு கூலிபடையை தன்னுடைய அப்பா ஏற்பாடு செய்துள்ளார்.
நீ எப்படியாவது முயற்சி பன்னி அவங்க குடும்பத்தை பாதுகாப்பா யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு அனுப்பி வைக்கனும், எந்தவொரு சூழ்நிலையிலும் என் அப்பாவால் ஜாஸ்மீன் குடும்பத்திற்கு வராதுனு சத்தியம் பன்னி குடுத்துருக்கேன் என்னால இப்போ எதுவும் செய்ய முடியாது நீ தான் அவங்கள எப்படியாவது காப்பாற்றனும் என்று கெஞ்சி கேட்டான் தீபக்.

இவ்வளவு நடந்தும் தன்னுடைய காதலிக்கு செய்து குடுத்த சத்தியத்திற்காக அவளுடைய குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் தீபக்கின் காதலின் உறுதியை நினைத்து சந்தோஷ பட்டான் கௌதம்.

சரி நான் அவங்கள பாதுகாப்பாக ஊரை விட்டு வெளியே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் கௌதம்.

ஜாஸ்மீனின் வீட்டிற்கு சென்று உங்களை குடும்பத்தோடு கொலை செய்வதற்காக கூலிப்படையை தீபக்கின் அப்பா அனுப்பி உள்ளார் தயவுசெய்து இங்கிருந்து கிளம்பி என்னோடு வாங்க உங்களை பாதுகாப்பாக ஊரை விட்டு நான் அனுப்பி வைக்கிறேன் ஜாஸ்மீன் அண்ணன்களிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தான் கௌதம்,
ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.

கூலிப்படையும் அவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

PART13
COMING SOON ,,,,,,,,