...

7 views

நம்பகம்
ஒரு செய்தி யார் அனுப்பியது என்று தெரியாது. அது எந்த நாட்டில் நடந்தது என்று கூட தெரியாது. இந்த செய்தி எங்கிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது என்று தெரியாது. இதனை தமிழில் யார் ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியாது. ஆனாலும் அதன் உண்மை தன்மை அறியாமல் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். இனத்திற்கு எதிரான பதிவு. நாட்டிற்கு எதிரான பதிவு. மதத்திற்கு எதிரான பதிவு. கட்சிக்கு எதிரான பதிவு. இப்படி பல இருக்கிறது. ஆனால் இங்கே எவரும் தான் சார்ந்த கட்சி, மதம், மற்றும் சாதி செய்யும் அக்கிரமங்களை வெளியே சொல்வதில்லை. சார்பு நிலைப்பாடே இங்கே அதிகம் இருக்கிறது. வருகிற வாட்ச் செய்திகளை எல்லாம் மனசாட்சியோடு எல்லோரும் அனுப்புங்கள். யாரும் அனுப்ப மாட்டார்கள். ஏனென்றால் நடுநிலையாக இங்கே யாரும் செயல்படுவதில்லை.