...

16 views

காத்துக்கருப்பு
எப்போதும் போலவே அன்றும் ஒரு சராசரி நாளாகத் தான் கடந்தது சீதாவிற்கு... பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் வீடு திரும்பினார்கள்.... வேலைக்குச் சென்ற கணவரும் வழக்கம் போலவே தாமதமாக வீட்டுக்கு வந்தார்.... என்றாவது ஒரு நாள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் அந்த ஏமாளி....

அன்று இரவு வழக்கம் போல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட பின் அன்றைய நாள் முழுவதும் நடந்தவற்றை பகிர்ந்தவாறு சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் உறங்குவதற்காக அவரவர் படுக்கைக்கு சென்றுவிட்டனர்.... ஆனால் சீதா மட்டும் அடுக்களையில் மீதமிருந்த வேலைகளை செய்து கொண்டிருந்தால்...... வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு செல்லும்போது கணவர் குழந்தைகள் என அனைவரும் உறங்கி இருந்தனர்....
வீட்டின் கதவை தாழிட்டு, ஒவ்வொருவருக்கும் போர்வையை போர்த்தி விட்டு, கொசுவர்த்தியை ஏற்றி வைத்து, நடு இரவில் தாகமெடுத்தால் குடிப்பதற்காக ஒரு சொம்பில் தண்ணீரும் கொண்டு வந்து வைத்தாள். பிறகு அசதியின் மிகுதியால் படுக்கையில் விழுந்ததும் உறங்கினாள் சீதா....
சிறிது நேரம் கழித்து யாரோ கதவை தட்டினார்கள்.... உறக்கம் கலைந்த சீதா இந்த நட்டநடு இரவில் யார் கதவை தட்டுகிறார்கள் என்று குழம்பினால்.... சத்தம் அதிகமானது.... கதவை இன்னும் பலமாக தட்டினார்கள்..... சீதாவிற்கு மிகுதியாக பயம் பற்றிக்கொண்டது....
இத்தனை நேரம் எந்த குரலும் இல்லை, ஆனால் இப்போது ஒரு அசரீரி கேட்டது.... "சீதா கதவைத் திற" என்று ஒரு அகோரக் குரல் அழுத்தம் திருத்தமாய் பலத்த சத்தம் எழுப்பியது...
(....தொடரும்)


-- கவிநேசகி
© கவிநேசகி