...

8 views

கதை சொல்லி
நம் சிறுவயதில் நமக்கு கதை சொல்வதற்கு அம்மா அப்பா ஆச்சி தாத்தா அத்தை மாமா என்று பலர் இருந்தார்கள். வழி நெடுக நாம் பலர் கதை சொல்லி கேட்டு இருக்கிறோம். ஏன் சினிமா பார்த்து விட்டு வந்தால் கூட ஒரு சீன் விடாமல் சொன்ன பக்கத்து வீட்டு அக்காக்கள் நண்பர்கள் இருந்தார்கள். காலப்போக்கில் அந்த கதை சொல்லல் மறைந்தே போய்விட்டது. இன்றைய இளைஞர்கள் பலர் இதை விரும்புவதில்லை. நாமும் சொல்ல மறந்து விட்டோம். இந்த கோரண்ட்டையின் காலத்தில் தான் நான் யூடியூப்பில் பவா செல்லத்துரை அவர்கள் சொல்லும் அறம் சார்ந்த கதைகளை பார்த்து வருகிறேன். சம காலத்தில் பவா செல்லத்துரை ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி. அவர் மார்க்சியவாதி என ஒதுக்கி விட வேண்டாம். அறம் சார்ந்த செயல்படுகிற எல்லோரும் மார்க்சியவாதி தான். எனவே கண்டிப்பாக பாருங்கள்.
நட்புடன்
R.செந்தில்
மதுரை