...

12 views

கற்பூரவள்ளி க்ளினிக் 🏥
"உணவே மருந்து" இந்த வார்த்தையை அறியாமல் எவரும் தமிழ் கற்றிருக்க இயலாது. வெறும் வார்த்தையாகவே இது போய் விடக்கூடாது என்பதற்காக அந்த வார்த்தைக்கு உயிரூட்டப்பட்ட கதை இது.

நோய்வராயான்பட்டி...இந்த ஊருக்கு இந்த பெயர் வரக் காரணம் கற்பூரவள்ளி உணவகம் தான். அந்த உணவகத்தை நடத்தி வருபவள் கற்பூரவள்ளி. திருநங்கைகாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அவள் இந்த உணவகத்தை நடத்தி வருகிறாள்.

சந்தர்ப்ப சூழ்நிலை.... அந்த ஊர் அரசு உயர்நிலைப்பள்ளி காலியிட ஆசிரியர் பணிக்காக என்னை நியமனம் செய்தனர். ஆசிரியர் பணி என்றாலே மனஅழுத்தம், டென்ஷன் ஏற்படுவது எல்லாம் சகஜமே. அதனாலோ இல்லை இயற்கை மாற்றாத்தாலோ தெரியவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று.

மருத்துவரிடம் செல்ல முடிவு செய்தேன். க்ளினிக்கை நோக்கி நான் மட்டும் செல்வதை ஊர்மக்கள் வியப்பாக பார்த்தனர். க்ளினிக் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கேளிக்கை சிரிப்புடன்..... இங்கே பார்ரா! வாத்தி கம்மிங்😎

உள்ளே சென்று பார்த்தேன். நோயாளிகள் ஓய்வு எடுப்பதற்கு தானே மருத்துவமனை. ஆனால் இங்கு அதற்கு மாறாக மேஜை மேல் டேபிள் ஃபேன் போட்டு உறங்கி கொண்டிருந்தார் டாக்டர். கொட்டாவி விட்டப்படி எழுந்து என்ன வேண்டும் என்று கேட்டார். இதுவரை நான் சந்தித்த டாக்டர்கள் எல்லோரும் 'என்ன செய்கிறது?' என்று தானே கேட்டிருக்கின்றனர். இவர் மட்டும் ஏன் இப்பிடி கேட்கிறார்?🤔

இரண்டு நிமிடம் என்னை உற்று நோக்கிவிட்டு, மேஜையின் இடது பக்கத்தில் இரண்டாவது தட்டினை திறந்து ஒரு காகிதத்தை எடுத்தார். என்னை பரிசோதனை செய்யாமலே மருந்துச்சீட்டு எழுத தொடங்கி விட்டாரோ😦 அந்த சீட்டை வாங்கி கொண்டு வெளியேறினேன். சீட்டை பிரித்தால் "கற்பூரவள்ளி உணவகத்திற்கு சென்று வா".

நான் உணவகத்திற்கு தான் செல்லனும் என்றால், எதற்காக இந்த க்ளினிக் இருக்கிறது? அக்கம் பக்கம் விசாரித்து, நீண்ட தூரம் நடந்து அந்த உணவகத்தை சென்றடைந்தேன். இதான் அந்த கற்பூரவள்ளி க்ளினிக்கோ🤷. வெளியில் ஒரு பலகை "பத்து ரூபாய்க்கு அளவு சாப்பாடு".

அங்கிருக்கும் வேப்பிலை நீரால் கையை அலம்பி விட்டு உள்ளே சென்றேன். மூன்று நபர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு இடமிருந்தும், இரண்டு நபர் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஒருவர் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்த பின் தான் மற்றொருவர் அமருகிறார். பத்து ரூபாய் ஆகினும் அளவோடு தான் அனைவரும் சாப்பிடுகின்றனர்.
கூட்டம் அதிகமாக இருக்கிறதே....நேரம் ஆகுமோ?

சப்ளையரிடம் எனக்கு பார்சல் வேண்டும். அதோ அந்த அக்காவிடம் கேளுங்க. வாயிலின் முன்னே கற்பூரவள்ளி அக்கா அமர்ந்தபடி கல்லாப்பெட்டியில் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த அக்காவின் அருகே சென்று இவர்களை 'அக்கா' என்று அழைப்பதா....இல்லை 'அண்ணா' என்று அழைப்பது சரியா? எதற்கு வம்பு வெறும் 'பார்சல்' என்றே கேட்டு விடுவோம். நான் கையில் சீட்டு வைத்திருப்பதை பார்த்து விட்டு "சீட்டுடன் வருபவருக்கு இங்கு உணவு பார்சல் வழங்க பட மாட்டாது" என்றாள்.

பசியில் கோபத்தோடு 'ஏன்' என்று கேட்க, கற்பூரவள்ளி ஒரு முறை இந்த உணவகத்தை மேலே பார்த்த படி வலம் செய்து விட்டு வா சொல்கிறேன் என்றாள். அப்போது நான் இருந்த பசிக்கு மனிதரைக் கூட தின்று விடுவேன். இவ்வளவு தூரம் வெயிலில் நடந்து தாகத்தோடு இங்கு உணவருந்த வந்தால் என்னை மேலும் சுற்ற வைக்கிறாயா🤬. பல வாதங்களுக்கு பிறகு மேலே கழுத்தை தூக்கியப்படி சுற்ற ஆரம்பித்தேன்.

(இதை படித்து கொண்டிருக்கும் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். நமக்கு இயல்பாக ஏற்படும் கோபம், மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்றவற்றை எல்லாம் போக்குவதற்கு மருந்து கடைகளில் மருந்து கிடைப்பதுண்டா? ஆனால் இந்த உணவகத்தில் அதற்கு மருந்து கிடைக்கிறது)

நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்றும், உணவுக்கு முன் எது எனக்கு அவசியம் தேவை என்பதையும் கற்பூரவள்ளி அக்கா நன்கு புரிந்து விட்டார்கள். அவள் உண்மையிலே டாக்டரை காட்டிலும் உயர்ந்தவளே. தலையை மேலே தூக்கி பார்த்தால் பல வண்ணங்கலில் நிறைய நிறைய வாசகங்கள் எழுதப்பட்டு ஸ்டிக்கர் நோட்டீஸ்களாக ஒட்டப் பட்டிருந்தன.

கோபத்தை உப்பை போல் பயன்படுத்து🍚
அதிகமானால் சுவைக்காது🤗

சோம்பேறிதனம் மிளகாய் காம்பு போல🌶
கிள்ளி எரிந்து விட வேண்டும்🤧

வாழ்கையில் துன்பம் கசப்பான நெல்லிக்காய்🍈
ஆனால் சாப்பிட்டபின் அது இனிப்பான இன்பமே😋

ஒரு குக்கரைப் போல் இருங்கள்🤯 Pressure அதிகம் ஆகும் போது எல்லாம் விசில் அடிச்சு கொண்டாடு🥳

பொய் நூடுல்ஸ் போல் தற்காலிகமானது🍝 உண்மை இட்லி போல் என்றும் நிரந்தரமானது🍛

இலட்சியமும் முட்டையும் ஒன்று தான்🥚
தவற விட்டால் அது உடைந்து விடும்🍳

வெற்றி என்பது இட்லி போல் வேகும் போது தெரியாது😏 வெந்த பின் தான் தெரியும்☺

வெட்டியவுடன் வீணாகும் வெங்காயம் போல் வீழாமல்🌰 வேர் வரை வெட்ட வெட்ட பயன் தரும் வாழையாய் வாழு🍌

தோல்வி என்பது பெருங்காயம் போல தனியாக சாப்பிட்டால் கசக்கும்🥵 வெற்றி எனும் சாம்பாரில் கலக்கும் போது தான் சுவைக்க ஆரம்பிக்கும்🍲

தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது🥶
மற்றவர் மீது கொட்டினால் நம்மீதே சிந்திவிடும்🙃

வாழ்க்கை சிக்கலான இடியாப்பம் தான்🍥 அதில் அன்பு எனும் தேங்காய் பாலை கலந்தால் சுவைக்கும்🥛

படித்துக் கொண்டே வரும் பொழுது கால் தவறி டேபிளில் விழ, அங்கேயே விறுவிறு வென்று இலையை போட்டு சூடான கமகம உணவை உபசரித்தனர். மிகுந்த பசியில் இருந்ததால் நான் உண்டது இயற்கை உணவு என்பது கூட எனக்கு தெரியவில்லை‌🤗

பத்து ரூபாயை குடுத்து விட்டு பசி போய் விட்டது என்றேன். உன் மனம் சீராகி விட்டதா? என்று அக்கா கேட்டாள். மருத்துவத்திற்காக மேலும் ஐந்து ரூபாயை நீட்டினேன். ஆனால் அக்கா வாங்கி கொள்ள வில்லை. இவ்வளவு பேர் இங்கு வேலை செய்கின்றனர். வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்குகிறீர். எப்பிடி கட்டுபிடி ஆகிறது? என்று கேட்டேன்💰

'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'. இயற்கை தானியங்களை கொண்டு தான் இங்கு உணவு தயாரிக்கப்படுகின்றன. அதன் உற்பத்தி விலை குறைவே‌. நாமும் இனிமேல் இந்த உணவகத்தில் கண்டதை நம் வாழ்வில் கடைபிடித்து, நோயற்று வாழ்வோம். யாரேனும் க்ளினிக் பக்கம் சென்றாலும் கேளிப்போம்😁

நன்றி ,
-முத்து.

© Muthu