...

3 views

அம்மா
அம்மா!
வந்து விடவா?
வாழாவெட்டியாய்
வந்து விடவா?
கல்யாணத்துக்கு செஞ்ச
சீர்செனத்தி
போதவில்லையாம்...
மாமியாரும்,மாமனாரும்
நாத்தனாரும்
நாள்தோறும்
கொடுமைப்படுத்துகிறார்கள்...
தட்டிக் கேட்க வேண்டியவனோ
தலைமுடியை பிடித்து
தர தரவென்று
வெளியில்
இழுத்துப் போடுகிறான்...
ஒழிந்து போ சனியனே! என்று
ஓயாமல் வசை பாடுகிறான்...
குடித்துவிட்டு வந்து
அடித்து துவைக்கிறான்...
அம்மா!
வந்து விடவா?
வாழாவெட்டியாய்
வந்து விடவா?
வந்து கூட்டிப் போங்கள்
உயிராவது மிஞ்சும்...
மகள் வாழாவெட்டியாய்
வந்துவிட்டால்.
ஊர் என்ன சொல்லும்..
உலகம் என்ன சொல்லும்..
என்று நினைத்தால்
விட்டு விடுங்கள்
ஒரு முழம் கயிற்றில்
தொங்கி விடுகிறேன்!

விக்ணு கௌசிகா
© VIGNU GHOUSIKA