...

5 views

மணம் முதல் மரணம் வரை...
மரணப்படுக்கையில் ஒரு தாயின் மன ஓலம், "கண்களால் பார்த்து மனதால் நிறைந்த அவனை மணமுடித்து மூவைந்து கார்த்திகை கூட கழியவில்லை.... கண்ணுக்கினிய இரு ஆண் பிள்ளைகள் திரும்பும் இடமெல்லாம் அம்மா...அம்மா... என ஒலிக்கும் அந்த பிஞ்சு குரல்கள், படுக்கை விட்டு எழுவது முதல் மீண்டும் படுக்கைக்கு செல்லும் வரை அம்மாவை தவிர வேறு உலகம் அறியாத பிஞ்சு மனம் இரண்டும்.. கடிந்து கொண்ட நேரத்தை விட காதலித்த நேரமே அதிகம் என்னவனுடன்...
இனிய இவர்களை யாரு பார்த்து கொள்வது...
நான் இன்றி இவர்கள் உலகம் எவ்வாறு இயங்கும்"
என்று நினைக்கும் போதே அவள் கண்கள் நீர் பெருக்கெடுத்தது...
திட்டுக்கென்று விழித்தவள்,
கண்களை விழித்து பார்த்தாள்,
எல்லாம் கனவு...
எழுந்தவள் முதலில் முகத்தை கழுவி,
அவள் உடலின் மீது அக்கறை கொள்ள ஆரம்பித்தாள்.....

"எல்லாவற்றையும் குடும்பத்துக்காக என நினைக்கும் பெண்கள், தன்னை முதன்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும்"


© ❤நான் வாணி ❤