...

6 views

கிழவி
அன்று,
பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில்,
"யே சாமி!
சோர்வா இருக்கியானு கேட்டு
சோறு ஊட்டுவா வாய் நெறய,"
பெற்றவர்கள் திட்டும் போது,
"புள்ளையை திட்டாதீங்கடான்னு
பாசத்துல பரிஞ்சு பேசுவா "
அம்மா அப்பா வெளியில்
செல்லும் நேரங்களில்,
" சாமி இதெல்லாம் தா சேதி,
ஊரு உலகமெல்லாம் கெட்டு போய் கெடக்கு, பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இரு என அறிவுரை
கூறுவாள் "
உடம்பு சரி இல்லாமல் போனால்,
"யே சாமி கன்சி குடிக்குறியா,
தயலம் போட்டு விடட்டுமா?
கால் அமுக்கி விடறேன்
நீ தூங்குன்னு கால்மாடுலயே
இருப்பா"
இன்றும் என்றும்,
என் மனதின் நீங்கா மருந்தாய்
அவளின் குரல்!!!
அவளின் நினைவுகள் மட்டுமே
என்னுள் நீங்கா ஓவியமாய்!
என் "கிழவி "