...

2 views

மௌனம்
சில வரிகள்,
இரு விழி எதையோ தேட, இரவும் நிலவும் உன்னை மட்டுமே நோக்கிட,
எதை தான் தேடுகிறாய்,
இந்த பூலோகத்தின் காதல் தேவதை கண்கள் நிறைந்து இருப்பது ஏனோ,
வதனம் முழுதும் செவ்வானம் ஒளிவீச,
ஏனோ தென்றல் கூட தீண்ட மறந்து திகைத்து தான் நிற்கிறதோ,
உன் உதடு சாயத்தால் மேகம் நடுவே ஒளிந்த கதிரவனும்,
காதல் கொண்டதோ உன் மீது,
வெண்ணிலா வந்தும் போக மறுக்கும் கதிரவனிடம் போர் செய்ய முன்னேறிய நட்சத்திர கூட்டம் ஒரு பக்கம் இருக்க,
ஏனோ உன் மௌனம் மட்டும் விடையற்ற கேள்வியாய் என் கிறுக்களில்
© அருள்மொழி வேந்தன்

Related Stories