...

3 views

நிலவும் அவளும்,
செவ்வானம் இருள் சூழ மேக கூட்டம் மொத்தமாய் கை கோர்த்து கொண்டு அவள் வருகைக்காக காத்திருக்க,
நட்சத்திர கூட்டம் எல்லாம் அவள் பார்வை தீண்ட காத்திருக்க,
வேந்தனின் கீதை போல் அவளும் நடந்து,
பாரியின் ஆதினியாய் அவளின் சிரிப்பும்,
வர்மனின் வானதியாய் அவளின் அவளும் அந்த நிலவும் பொறாமை பட்டு மேகம் நடுவே கோவம் கொண்டு ஒளிந்து கொண்டது ஏனோ,
அவள் அழகில் மேகம் எல்லாம் சிரிக்க மின்னல் எல்லாம் அவளை கண்டு வெட்கம் கொண்டதோ வந்த நொடியில் காணாமல் சென்றது,
தீராத காற்றும் அவள் ஸ்பரிசம் தீண்ட தான் காத்திருந்தனவோ என்னையும் அவள் அருகில் செல்ல தடுத்து நிறுத்த,
என்ன மாயம் செய்தாய் நீ மழை மேகம் முதலில் வெண்ணிலா வரை உன் மீது காதல் கொண்டது,

வான் நிலவும் தன் நிழல் கொண்டு வர்ணம் பூசிய வானவில்லை உன் நெற்றியில் திலகம் இட,

உன் மீது நான் கொண்ட காதல் இருக்க ஏனோ இந்த பிரபஞ்சமே உன் மீது கொண்ட காதலால் திகைத்து போகிறேன்
© அருள்மொழி வேந்தன்