...

3 views

மின்மினியின் குரல் -1
எழுந்து வா,
பெண்ணே
எழுந்து வா!

உன் அழகை வசைப்பாட
எவருக்கும் தகுதியில்லை...
உன் சிரிப்பை குறை சொல்ல
எவருக்கும் உரிமையில்லை...

ஒருபோதும் நீ யாருக்கும்
சளைத்தவள் இல்லை!
நீ கடந்து வந்த பாதையின்
கால் தடங்கள் பிறரது இல்லை!

போதுமடி ஓரமாய்
ஓய்ந்து அழுதது...
போதுமடி உன் கன்னங்கள்
காயங்களில் சிவந்தது...

எழுந்து வா,
கண்ணே
எழுந்து வா!

திசைக்கு திசை
திரிவார்கள்
வக்கிரம் பிடித்த
உருவங்கள்...

உன்னை எடைப்போட
யாரும் இங்கு
நியாய தராசு அல்ல...
மாற்றம் வேண்டும்,
மாற்ற வேண்டும்!

பணிந்தது போதும்...
துணிந்து...