...

5 views

நீயெனவே ஆகலாம்..
இமைகள் மீறி சில நேரம்,
என் விழிகள் கண்ணீர் வடிக்கலாம்.
வழியும் கண்ணீர் துடைக்க சில நேரம்,
நான் கைகள் தேடலாம்.
வருடும் கைகள் கொண்டு சில நேரம்,
காற்று என் கண்ணீர் துடைக்கலாம்.
ஒளிர் விடும் கதிர்அவன் சில நேரம்,
எண் கண்கள் உலர்த்தலாம்.
குளிரும் சந்திரன் சில நேரம்,
என் உள்ளக் காயம் ஆற்றலாம்.
மழையாய் உருகி சில நேரம்,
மேகம் என் வலிகள் கறைக்கலாம்.
தவழும் இசையும் சில நேரம்,
என் தனிமையின் கைகள் கோர்க்கலாம்.


இவை யாவும் சில நேரம்,
எனக்கு நீயெனவே ஆகலாம்..
...........

© manjupriya❣️