...

10 views

இன்ஸ்டாகிராம் பதிவு 2
நேற்று எங்கள் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் விழா....

(கொரோனா கட்டுப்பாடுகளுக்காக தடை பிறப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு)

காலையில் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே ஒழுங்காக நடந்து முடிந்தன....

இடையே விழாவிற்காக சிற்றுண்டியுடன்...

அதன் பின்னர் நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் பொழுதைக் கழித்துத் கொண்டிருந்தேன்...

நண்பர்கள் செலவு செய்ததின் காரணமாக கடலை மிட்டாய்,பனிக்கூழ் மற்றும் பிற தின்பண்டங்களை தின்றோம்...

பின்னர் விடுதிக்கு சென்றபோது அங்கு பரபரப்புடன் காணப்பட்டது. கல்லூரி நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் வந்திருந்தனர்.

அதில் என் விடுதி நண்பர்கள் காரைக்கால் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.

*எதற்கு காரைக்கால் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்...

அதில் ஒரு குரல் கடற்கரைக்கு செல்லலாம் என்று கூறியது.

அந்த ஒரேயொரு காரணத்திற்காக என் நண்பர்கள் பலரையும் சேர்த்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தயாரானோம்...

பயணம் என் வாழ்வின் மறக்க முடியாதது...

கல்லூரியின் எதிரே இரயில் நிறுத்தம்... வசதி...

தஞ்சாவூர்-திருவாரூர்

இந்த வழியில் என் முதல் இரயில் பயணம்...

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகப்பட்டினம் வரை செல்ல முடியவில்லை...

என் வகுப்பு நண்பர்கள் பலரும் வந்திருந்தனர்... மிக்க மகிழ்ச்சியாக கழிந்த பொழுதுகள்...

கையில் செலவுக்கு போதிய பணம் இல்லை=நண்பர்கள்

ஊர்கள் வரவர நண்பர்கள் குறைந்தது கொண்டே இருந்தனர்-வருத்தம்...

திருவாரூர் கோயில் கோபுரம் கண்ணில் பட்டது-பிரம்மாண்டம்.

என் உயிர் நண்பர்கள் பிரிந்து செல்ல விடுதி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டேன்..

அங்கிருந்து நாகப்பட்டினம் 20 கிலோமீட்டர் இருக்கும்.

ரெங்கா என்ற பேருந்தில் ஏறினோம்...

படியில் பயணம்... அங்கயும்...

வளைந்து வளைந்து செல்லும் குறுகலான தேசிய நெடுஞ்சாலை.

டிரைவரின் வேகம்=சர்க்கஸ் இலவசம்...

நாகப்பட்டினம் பேருந்து நிலையம். ஏற்கனவே சிறு வயதில் வந்த நினைவுகள்...

பாண்டிச்சேரி மாநில பேருந்துகள்= புதிதாகக் கண்ட சோப்பு டப்பாக்கள்...

நாகூர்=ஜிப்ஸி

காரைக்கால்=தூய்மை, அழகு...

அங்கு சென்ற பிறகு குழுவானது இரண்டாக பிரிந்தது நானும்@thara_murali23 @gnanamullavan @own_companion_ @mr_romantic___15 ஆகியோர் உணவு உண்ண சென்றோம்.

மந்தி என்ற உணவை தேடி....

அப்போது இந்த தேவாலயம் என் கண்ணில் பட்டது...

எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு....

ஆனால்..... எங்கேயோ அல்ல. என் கனவில் ஒருமுறை தோன்றியது...

நம்பித்தான் ஆகவேண்டும்...

ஆகவே அங்கு சென்று பார்க்க வேண்டும் என்னும் ஆவல்....

அப்படியே சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் சென்று பார்த்தேன்...

ஒரு வித்தியாசமான காலப்பயணம் செய்த உணர்வு... அருமை 👌

அதன் உள்ளே சென்ற போது வெளியே நின்ற பெண் ஒருவர் எங்களை கைபேசியை பயன்படுத்த வேண்டாம் என்றும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் கூறினார்.

ஆனால் நாங்கள் அதை கேட்கவில்லை. அங்கு கூட்டமும் இல்லை.

ஆகையால் எங்களுக்கு புகைப்படம் எடுக்க வசதியாக இருந்தது.

பின்னர் சற்று நேரம் தனியாக அமர்ந்து என் கோரிக்கைகளை முன்வைத்து அவர்களிடம் வேண்டினேன்...

பின்னர் வெளியே சென்று சுற்றிப் பார்த்தேன்...

கனவில் தோன்றிய இடத்திற்கும் இதற்கும் சில வேறுபாடுகள் இருந்தன.

ஆனால் இந்த நீல நிற கோபுரம் மட்டும் பொதுவாக இருந்தது இரண்டிலும்..........‌

@gnanamullavan இதற்கு முன் இது போன்ற கோவிலுக்கு சென்றதில்லை போல...
இது மாதிரி இடத்தயெல்லாம் படத்துலதான் பாத்துருக்கேன் என்றான்....
😮😮😮😮😮

அதன் பின்னர் அங்கு தொங்கிக் கொண்டிருந்த மணியை அடிக்க அதன் கயிற்றை பிடித்து இழுத்து முயற்சித்து பார்த்தான்
🔔🔔🔔🔔🔔

ஆனால் முடியவில்லை...
🙃

அதுவும் நன்மைக்கே...
☺️☺️☺️☺️☺️

நாங்கள் அங்கு சென்ற போது ஒரு பள்ளி மாணவி தன் அம்மாவுடன் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தாள்....
👩‍👧👩‍👧👩‍👧👩‍👧👩‍👧

அவர்கள் அங்கு வழக்கமான வருபவர் போல....
👣👣👣👣👣

மெழுகுவர்த்தியை ஏற்றி பின்னர் அங்கிருந்த கடவுளர்களின் புகைப்படங்களின் மேல் கையை வைத்து வேண்டிக் கொண்டிருந்தாள்....
🕯️🕯️🕯️🕯️🕯️

நான் அந்த மெழுகுவர்த்தியின் வெப்பத்தை சிறிதாக கையில் ஒற்றிக்கொண்டேன்.....

இதமாக இருந்தது....
😊😊😊😊😊

அவர்கள் பிரார்த்தனைகளை முடித்து விட்டு சென்றதும் அங்கு ஒரு முதிய வயதான மத பற்றாளர் வந்தார்
👴👴👴👴👴

ஒவ்வொரு இருக்கையிலும் காகிதங்களை வைத்துக் கொண்டிருந்தார்...
🗞️🗞️🗞️🗞️🗞️

நான் அதை எடுத்து படித்து பார்த்தேன்....
📃📃📃📃📃

அது வழக்கமாக தேவாலயத்தில் பிரசங்கம் வைக்கும் போது செய்ய வேண்டிய செயல்பாடுகளின் தொகுப்பு....
📢📢📢📢📢

"இடைவிடா சகாய மாதாவே" என்ற பாடலுடன் தொடங்கி இருந்தது...
🔊🔊🔊🔊🔊

என் ஊரில் உள்ள தேவாலயமும் அங்கு நான் கேட்ட அந்த பாடலுக்கான குரலும் அத்துடன் சில நினைவுகளும் மனதில் வந்து சென்றன...

😇😇😇😇😇 அருமை...... 👋👋👋👋👋

அதன் பின்னர் கடற்கரையில் இருப்பதாக தெரிவித்த மற்ற நண்பர்களை தேடி நடக்கத் தொடங்கினோம்...
🚧🚧🚧🚧🚧🚧🚧
© murugs

#pudukkottai #karaikal #thanjavur #avvmspc #memories #dream #travel #train #bus #friendship #friends #######