...

14 views

காதல் பூ பாகம் 1
தோரணங்களால் அலங்கரித்தது போல் ஒரு தோட்டம். அங்கு அங்கு வண்ணம் தீட்டியது போல் பூக்கள். அதில் வாசம் மாறாமல் தினமும் பல வித வடிவங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.

அந்த தோட்டத்திற்கு நடுவே ஒரு வீடு, அதன் முற்றத்தில் அழகாக ஒரு கோலம் போடப்பட்டிருந்தது. அப்படியே உள்ளே சென்று பார்த்தால் சுற்றி அறைகளாக கொண்டது, ஆனால் நடுவே துளசி மாட முற்றம் அமைந்திருந்தது, அங்கு பூஜை செய்ய பட்டிருந்தது. அதனால், அந்த வீடே மங்களகரமாக இருந்தது.

அந்த தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தது ஒரு குழந்தை.

அவன்,
மலராத மொட்டுகளை போன்ற கண்களை கொண்டவன்,
ரோஜவை போன்ற மென்மையான இதழ்கள் உடையவன்,
கொடிகளை போன்ற சுருண்ட கேசம் பெற்றவன்,
கண்டவுடன் புன்னகைக்கும் முகம் உடையவன்,
கேட்டவுடன் இனிக்கும் குரலை வரமாக பெற்றவன்,
இப்படி வர்ணித்து கொண்டே செல்லலாம் அவன் அழகை......

மலரழகன் என்று அந்த குழந்தைக்கு பெயரை சூட்டி அகம் மகிழ்ந்தனர் அவனது பெற்றோர்.

அவனுக்கு இப்பொழுது ஐந்து வயது. மலரழகன் அவர்களுக்கு கல்யாணமாகி ஐந்து வருடம் கழித்து பிறந்தவன், இவன் இவர்களின் காதலில் பூத்தவன்.

மலரழகனின் அம்மா கயல்,

பெயருக்கு ஏற்றாற்போல் அழகானவள்,
எப்பொழுதும் புன்னகைக்கும் முகம் கொண்டவள்,
இரக்க குணம் உடையவள்,
அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்பவள்.

அப்பா மதி,

மதியை போன்ற பிரகாசிக்கும் முகம் கொண்டவன்,
கட்டுடலுக்கு சொந்தகாரன்,
தான் நேசிப்பவர்களுக்காக எதையும் எதிர்த்து நிற்பவன்,
அதனால் முரடன் என்று பெயர் பெற்றவன்.

இவர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகே தொடங்கியது என்று சொல்லலாம்.

ஏனென்றால், அவர்கள் கல்யாணம் அவர்களது பெற்றவர்கள் பார்த்து நடத்தி வைத்ததது. கல்யாணத்திற்கு முன்பு வரை இருவரும் பார்த்து கொள்ளவில்லை, ஒருமுறை கூட பேசவும் இல்லை.

ஏனென்றால், இருவரும் அவர்களுடைய பெற்றோர்களுக்காக இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தனர். இருவருக்கும் காதல், கல்யாணம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனாலேயே அவர்கள் அதை பற்றி சிந்திக்கவே இல்லை.

ஆனால் விதி விளையாடியது. இவர்களின் கல்யாணம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் சொந்தங்களின் கேள்விகளால் அவர்களது பெற்றவர்கள் மனம் வருந்தினார்கள். அதை பார்த்து அவர்களும் வருந்தினர். இவ்வாறு அனைவரும் வருந்துவதை தவிர்க்க ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதனால் மதி, அவர்களின் பெற்றோரிடம், நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் பெண் பாருங்கள். ஆனால் நான் வர மாட்டேன், நீங்கள் தேர்ந்தெடுபவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்றான் முடிவாக.

இதற்கு மேலும் ஏதாவது சொன்னால் மனம் மாறிவிடுவானோ என எண்ணி அவர்களும் சரி என்று சொல்லிவிட்டனர். மதியின் பெற்றோர்க்கு மகிழ்ச்சி தாளவில்லை, அவன் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தது.

தங்கள் மதிக்கானவளை தேட தொடங்கினர்.
முதலில் கல்யாண தரகரிடம் மதியின் புகைப்படம் மற்றும் ஜாதகத்தை அளித்து பெண் பார்க்குமாறு கூறினார்கள்.

அதே நேரத்தில் மதி சொன்ன இதே வார்த்தைகளை கயல் தன் பெற்றோரிடம் கூறிக் கொண்டிருந்தால். அதனால், அவர்களும் மும்முரமாகினர் மாப்பிள்ளை பார்ப்பதில்.

அப்போது தரகர் மூலம் கயலின் புகைப்படம் மதி வீட்டிற்கு வந்தது. கயலின் புகைப்படம் பார்த்தவுடன் பிடித்துவிட்டது மதியின் பெற்றோர்களுக்கு, இருந்தாலும் கயலுடைய மற்ற விவரங்களை எல்லாம் சொன்னார் தரகர். அவர்களும் எங்களுக்கு பெண்ணை பிடித்து இருக்கிறது, இதை பெண் வீட்டிற்கும் சொல்லி சம்மதமா என்று கேட்டு சொல்லுங்கள் என்றனர் தரகரிடம். அவரும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதே நேரத்தில் உனக்கு ஒரு பெண்ணை பார்த்து இருக்கிறோம் என்று மதியிடம் சொன்னார் அவனுடைய அம்மா, அவனும் சரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

இவன் இப்படி  எதுவும் சொல்லாமல் சென்றதும் அவருக்கு மனதில் வருத்தம் இருந்தாலும், இவன் திருமணத்திற்கு சரி என்று சொன்னதே பெரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து சென்றார் அரை குறை மனதுடன். அன்று மாலை நடந்ததை அவனுடைய அப்பாவிடம் சொல்லி வருந்தி கொண்டிருந்தார் மதியின் அம்மா. அதற்கு அவர் திருமணத்திற்கு பிறகு பார், நீயே பிரமித்துப் போகும் அளவிற்கு அவன் எப்படி வாழ போகிறான் என்று, அவனா இவன் என்று நீயே கேட்பாய் என்றார்.

இப்போது தரகர் கயலின் வீட்டில் இருந்தார் மதியின் விவரங்களுடன், அவளது அப்பா அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கையில் காபியுடன் அங்கு வந்தார் கயலுடைய அம்மா. இருவரும் மதி பற்றிய விவரங்களை நன்கு கேட்டு அறிந்து கொண்டனர். அவர்களுக்கும் மதியை பிடித்து இருந்தது.

எங்களுக்கும் பையனை பிடித்து இருக்கிறது, ஒரு நல்ல நாள் பார்த்து விட்டு பெண்ணை பார்க்க வருமாறு தரகரிடம் சொல்லி அனுப்பினர், கயலுடைய பெற்றோர்கள்.

இதை கயலிடமும் சொன்னார்கள், அவளும் அவன் யார், என்ன செய்கிறான் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தால்.

இவள் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்தவுடன், அவளுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மனம் பதைப்பதைத்தது, ஒருவேளை இந்த சம்பந்தம் இவளுக்கு பிடிக்கவில்லையோ என்று. இருந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் அவளிடம் கேட்டார் அவளுடைய அப்பா, உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லையா என்று, உனக்கு பிடிக்கவில்லை என்றால் இப்போதே தரகரிடம் சொல்லி விடலாம் என்றார்.

அதற்கு அவள் அப்படியெல்லாம் எதுவும் இல்லை, உங்களுக்கு பிடித்திருந்தால் சரி எனக்கு அது போதும் என்றால். ஆனால் மனம் தான் வருத்தமாக உள்ளது உங்களை எல்லாம் பிரிய வேண்டும் என்று நினைக்கும் போது என்றால். அப்போது அவள் அம்மா சொன்னார், பெண் பிள்ளை என்றாலே இந்த மாதிரி எல்லாம் ஒரு நாள் நடக்கும் என்று. இதற்கெல்லாம் வருந்தாதே எல்லாம் திருமணத்திற்கு பிறகு  சரியாகிவிடும் என்றார்.

அப்போது மாப்பிள்ளை புகைப்படத்தை பார் என்று தந்தார். இல்லை அம்மா நான் பார்க்க வேண்டாம் என்றால் கயல். ஏன் என்று கேட்டார் அவளுடைய அம்மா, அதற்கு அவள் என்னை பார்க்க வரும்போது பார்த்துக் கொள்கிறேன் என்றால். அதற்கு அவர் உன் இஷ்டம் என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டார்.

மதி வீட்டிலும் ரொம்பவும் மகிழ்ச்சியில் இருந்தனர் இந்த விஷயத்தை தரகர் சொன்னவுடன். உடனே, மதியினுடைய அப்பா நாட்காட்டியை பார்க்க ஆரம்பித்தார் பெண் பார்க்க போக வேண்டிய நல்ல நாளுக்காக. ஒரு நல்ல நாளும் குறிக்கப்பட்டது.


© Megaththenral