...

1 views

மார்டன் சூனியக்காரி
அத்தியாயம் 10

உண்மையில் விக்கி எப்படி பட்டவன் என யாருக்கும் தெரியவில்லை அவன் கல்லூரியில் பெரிய பணக்காரரின் மகன் அவன் அப்பா கிஷோர் தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் பணக்காரர் என எல்லோருக்கும் தெரிய ஆனாலும் சதீஷ் சுரேஷ் கூறுவதை கேட்ட ஆதிரா இதை நம்ப முடியாமல் தினறினால் சிவவை பார்த்த கதிர் சிவா இதுக்குள்ள நீ எப்படி போன எனக் கேட்கச் சிவா நான் சிலதை தேடி வேற வேற டார்க் வெப் உள்ள போனேன் அதுல ஒருத்தன் ஒரு கேள்வி கேட்க அதுல டானென ஒரு id அதுக்கு பதில் சொல்லி இருந்துச்சு எனக்குத் தெரிஞ்சு அவன் எல்லாத்தையும் எஎக்ஸ்போஸ் பண்ண நினைக்கிறானென நினைக்கிறேன் அங்க என்ன கேள்வி கேட்டாலும் சம்பந்த பட்ட கேள்விக்குச் சிலர் அவங்க பிரைவேட் மெசேஜ் லத்தான் பேசுவாங்க யாரும் அதுல இருக்கிற கேள்வி கீழ இதே மாதிரி சொல்லமாட்டாங்க அவன் கேட்ட நேரம் 5 நிமிடம் முன்னாடி அடுத்த ஒரு நிமிடம் ல இது எல்லாம் தெரிய வந்துச்சு நான் தேடி போனது கீதா பத்தி தான் அவளோட படம் வச்சி அதுமாதிரி எதுனா படம் டார்க் வெப் ல இருக்க வாய்ப்பு இருக்கா என ஆனா எனக்கு அதைவிடப் பெரிய விஷயம் கிடைச்சு இருக்கு எனக் கூறினான் சதீஷ் அங்கே வந்து அந்தச் சர்வர் எங்க இருக்கு எனக் கண்டு பிடிக்க முயற்சி செய்தான் அதிக டேட்டா இருக்கு அப்போ கண்டிப்பா ஒரு பெரிய சர்வர் அதுக்கு ஸ்டோரேஜ் எனக்குத் தெரிஞ்சு இது நம்ம சிட்டி நடுவுல இருக்கிற ஏதோ ஒரு இடமா தான் இருக்க முடியும் கண்டிப்பா இத்தனை பொண்ணுங்க பசங்க டீடெயில்ஸ் இருக்கு அப்படினா கண்டிப்பா இது இருக்கிற இடம் ஸ்கூல் காலேஜ் இருக்கிற இடம் பக்கத்துல தான் இருக்கும் எனச் சதீஷ் கூறினான் அதைக் கேட்ட ஆதிரா அதை எப்படி அவளோ சரியா அங்க தான் இருக்க முடியும் எனக் கேக்க நல்லா யோசிச்சு பாருங்க யாரும் இதைப் பெரிய கம்பெனி மாதிரி நடத்த மாட்டாங்க அதுக்கு ஒரு காரணம் அந்தச் சர்வர் ஏதாவது ஒரு டைம் ஏதாவது ஒரு சர்வர் கூடக் கனெக்ட் ஆகும் இல்லை அந்தச் சர்வர் இருக்கிற இடத்துல இருக்கிற wifi யாராவது hack செய்ய நினைச்சா கண்டிப்பா இந்தச் சர்வர் hack ஆகக் கொஞ்ச வாய்ப்பு இருக்கு ஆனா இதே மாதிரி சின்னக் கடை அதுல wiif rooter இல்லாம வெறும் ethernet cable மட்டுமே வச்சு அதைச் செயல் படுத்த முடியும் எனக்குத் தெரிஞ்சு அதிக கல்லூரி ஸ்கூல் இருக்கிற இடம் பாளையம் கோட்டை தான் ஒருவேளா அங்க தான் ஏதாவது ஒரு கடையில எங்கயோ மறைச்சு வச்சு இந்தச் சர்வர் வொர்க் ஆகணும் எனக் கூறினான் சதீஷ் சுரேஷ் உம் அதைத் தான் நினைத்தான் , ஆனாலும் ஆதிரா பல குழப்பம் நடுவே அந்த டான் யாரு எனக் கண்டு பிடிக்க முடியுமா எனப் பாரு சதீஷ் எனக் கூற அவன் அவள் கூறுவதற்க்கு முன்பே அதைச் செய்ய ஆரமித்து விட்டான் , சதீஷ் வேகத்தைக் கண்ட சிவா கதிர் ஆதிரா எல்லோரும் யாரு டா இவன் இவனோட வேகத்துக்கு அந்தச் சிஸ்டம் கூட ஒத்துழைக்க மாட்டைக்கு எனக் கதிர் நினைத்தான் , சுரேஷ் இன்னொரு சிஸ்டம் அருகில் சென்று அவன் கையில் வைத்து இருந்த pendrive அதில் மாட்டி ஜாக் இங்க வர முடியுமா எனக் கேட்க ஜாக் அங்கே வந்தான் , ஜாக் இந்த pendrive நான் உருவாகின software இருக்கு அதுல தேடி பார்ப்போம் எனக் கூற அந்த pendrive எடுத்துத் தான் உடம்பில் இருக்கும் usb port யில் மாட்டி அதைச் செக் செய்ய ஜாக் உடம்பில் அந்த software இன்ஸ்டால் ஆனது , அதைக் கண்ட சுரேஷ் என்ன ஜாக் பண்ற எனக் கேட்கவில்லை சுரேஷ் அண்ணா என்னோட ரோபோட்டிக் software இதை ஏத்துக்கிட்டது எனக் கூறினான் ஜாக் அதைக் கண்டு சுரேஷ் திகைத்து விட்டான் உடனே ஜாக் அங்கே உக்காந்து அதன் முகத்திரையில் இருக்கும் அந்த software ரன் செய்ய அதன் கண்கள் அருகில் கீதா புகைபடம் காட்ட அதை scan செய்த ஜாக் அதை அந்த softwARE யில் செயல் படுத்த ஆரமிக்க சில நிமிடத்தில் அங்கே இருக்கும் பெரிய டிவியில் திரை ஒளிர ஆரமித்தது அதில் கீதா பற்றிய உண்மைகள் தெரிய வரச் சதீஷ் அதைக் கண்டு டேய் அந்த software எப்போ ரெடி செஞ்ச எனக் கேட்கக் கொஞ்ச நாள் முன்னாடி தான் டா அடுத்த வாரம் நடக்க போற எங்க காலேஜ் ஃபங்சன் ல இதைச் செயல் படுத்த தான் வச்சு இருந்தேன் டா எனக் கூற சரியெனக் கூறி எல்லோரும் அந்த டிவியை பார்க்க அதில் கீதா இருக்கும் மொபைல் நம்பர் வச்சு இப்போ எங்க இருக்கா எனவும் அவள் மொபைலில் ஒரு மெசேஜ் வர அதை ஓபன் செய்த வுடன் அதன் முன் கேமரா செயல் பட ஆரமித்தது அதை hack செய்தது ஜாக் தான் , ஜாக் ஜூலி இருவரும் advanced robot அவர்களால் சுயமாகச் சிந்திக்க மற்றும் அவர்களால் மனிதர்கள் செய்ய முடிந்த முடியாத செயல்கள் எல்லாம் செய்ய முடியும் , எல்லோரும் கீதா இப்போ இருக்கும் இடம்பற்றி அறித்த பின் சற்று திகைத்துப் போனார்கள் அவள் தூத்துக்குடி சாலையில் உள்ளே தள்ளி இருக்கும் ஒரு பழைய காலேஜ் உள்ளே இருப்பது போல இருக்க அந்தக் காலேஜ் மூடிக் கிட்டதட்ட 10 வருடங்கள் கடந்து விட்டதால் அங்கே யாரும் செல்வதில்லை அந்த இடத்தில் இவள் என்ன செய்கிறாளென ஆதிரா பார்த்துக் கொண்டு இருக்க அங்கே சில குரல் கேட்க அந்த மொபைல் தனது பையில் போட்டு விட்டு அங்கே செல்ல அங்க அவர்கள் பேசுவது இங்கே இருக்கும் அனைவருக்கும் தெளிவாகக் கேட்க ஆரமித்தது , அவள் இந்த ரம்யா எங்க போனா எனத் தெரியல விக்கி அந்த வர்மா எங்க போனானெனக் கேட்க விக்கி அதற்க்கு எங்களுக்கும் தெரிய வில்லை எங்கயோ ஓடி ஒளிஞ்சு இருக்கான் தான் நினைக்கிறேன் அந்தச் சுரேஷ் எப்போ உன்னோட வழிக்கு வரப் போறான் சீக்கிரம் நம்ம அடுத்த திட்டம் படி அவனை நம்ம கூட்டத்தில சேர்க்க பாரு அது மட்டும் இல்லாம அவன் தான் நம்ம சோதனை எலி ரெண்டு நாள் தான் நம்ம கூட இருக்கணும் அதுக்குள்ள அவனை அந்தப் போதை பொருளுக்கு அடிமையாக்கி விற்று சரியா எனக் கேட்கச் சுரேஷ் ஒரு நிமிடம் ஆடிப் போனான் அவனுக்கு அத்தனை கோவம் வர என்ன செய்ய என யோசித்து கொண்டு இருந்தான் அந்த ரம்யாவை என்ன பண்ண எனக் கீதா கேட்டால் அவளுக்கு வேற ஒரு சம்பவம் இருக்கு அந்த வர்மா எங்க இருக்கானென முதலில் நமக்குத் தெரியணும் என அந்த விக்கிக் கூற சரி இப்போ ஒடனே எதும் செய்ய வேண்டாம் ரெண்டு வாரம் போகட்டும் சரியா எனக் கீதவிடம் கூறினான் அதுக்குள்ள அந்தச் சுரேஷ் யை உன்னோட கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வரப் பாரு எனக் கூறி விட்டு அவன் கிளம்புறேன் எனக் கூறி சென்றான் , அங்கே இருந்த கீதா அதைப் பார்த்து விட்டு அவள் பையில் போட்ட மொபைல் யை எடுத்து அதில் யாருக்கோ மெசேஜ் அனுப்ப அதைக் கண்ட எல்லோரும் யாருக்கு என ஆவலாகப் பார்த்தனர் அவள் அங்கே இருந்து சுரேஷ்கக்கு தான் மெசேஜ் அனுபினால் எங்க இருக்க சுரேஷ் எனக் கேட்க அதைக் கண்ட சுரேஷ் என்ன செய்வது எனத் தெரியாயமல் நான் இங்க தான் எங்க வீட்டுல இருக்கேன் எனக் கூறினான் அதற்க்கு சரியெனக் கூறி வர்மா பத்தி ஏதாவது தெறிஞ்சுதா எனக் கேட்கக் கதிர் அருகிலிருந்து எதும் தெரியவில்லையெனச் சொல்லு எனக் கூறினான் அதைப் போல் அவனும் சொல்லச் சரியெனக் கூறி விட்டு அவள் மொபைல் பையில் வைத்தால், சதீஷ் ஜாக் அந்த மொபைல் பக்கம் ஏதாவது சிக்னல் இருக்கா எனப் பார்க்க முடியுமா எனக் கேட்க ஜாக் ஆமா பார்க்கலாமெனக் கூறி அருகில் ஏதாவது சிக்னல் வருகிறதா எனப் பார்க்க அருகில் அந்தப் பையில் veru மொபைல் இருப்பதை காட்டி கொடுக்க அதை என்ன என்று பார்க்கச் சொன்னால் ஆதிரா ஜாக் அதைக் கண்டுபிடிக்க முயல அவனால் முடியவில்லை அது high security போட்டு இருப்பதாகக் கூறினான் , ஏமாற்றம் அங்க இருக்க நடுவில் ரம்யா நான் உங்களுக்கு உதவ முடியும் எனக் கூறினால் அவளும் கீதாவும் ஒரே ஹாஸ்டல் என்பதால் அவள் என்னை அவள் தோழியென நினைப்பதால் அந்த மொபைல் நான் எடுத்துத் தாரேன் ஆனா அதுக்கு ஆதிரா நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும் எனக் கேட்க அதற்க்கு ஆதிரா சரியெனக் கூறினால் நீங்க நாளைக்கு எங்க ஹாஸ்டல் வாங்க அங்க பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கு எனச் சோதனை பண்ற மாதிரி வாங்க நான் அந்தக் கீதா உங்களைப் பார்த்தவுடனே எப்படி ரியாக்சன் செய்கிறாளெனப் பார்போம் எனக் கூறினால் அதற்க்கு ஆதிரா சரியெனக் கூறி விட்டுச் சுரேஷ் உனக்கு இதுல ஒரு வேலை இருக்கு நீ நாளைக்கு எங்க போலீஸ் ஸ்டேஷன் வாரச் சதீஷ் இவன் மேல ஒரு கேஸ் இருக்கு என நீ தான் கூட்டிட்டு வரணும் சரியா இது எல்லாமே நம்ம திட்டம் தான் நான் ரம்யா கீதா வை அங்க போய்ப் பார்க்கிறேன் நீங்கக் காலேஜ் ல இப்படியொரு லெட்டர் கொடுத்துட்டு வாங்க ரீஷன் என்ன என்று கேட்டால் உன்னோட லாபட்டப் காணாமல் போச்சு எனச் சொல்லிடு அதுக்கு தான் சதீஷ் கொடுத்த புகார் க்கு கூப்பிட்டு இருக்காங்க எனச் சொல்லு சரியா, காலேஜ் ல வந்து கூப்பிட ஒரு கான்ஸ்டபிள் வருவாரு அவங்க கூட வாங்க சரியா என ஆதிரா கூறினால் அதைக் கேட்ட கதிர் இது எல்லாம் எதற்க்கு எனக் கேட்க இவங்க பாதுகாப்பு க்கு தானென ஆதிரா கூறினால் ஏதாவது ஒரு வகையில் இவர்களுக்கும் போலீஸ் க்கும் பேச்சு வார்த்தை இருக்க வேண்டும் என ஆதிரா நினைத்தால்.. அதைப் புரிந்து கொண்ட கதிர் சரியெனக் கூறினான் .. 


© அருள்மொழி வேந்தன்