...

5 views

காதலின் அர்த்தம் - 2


தன்னுடைய பெற்றவர்களுக்காக ஒரு எந்திரம் போல ஒரு சேலையை உடம்பில் உடுத்திக்கொண்டு மெத்தையின் மீது சிரித்தபடி இருந்த தங்க நகைகளைப் பார்த்து ஒரு விரக்தி புன்னகை செய்தாள்.

தன்னுடைய முகத்தில் சந்தனத்தை பூசுவதற்கு பதிலாக வலியை பூசிக்கொண்டு கண்ணாடியின் முன்பு உட்கார்ந்து இருந்தாள் பாவை.

நிமிடங்கள் மணியாக மாறியது. ஆனால் அவளிடம் எந்தவித மாற்றமும் இல்லை. வெளியே ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. அவர்கள் பேசும் வார்த்தைகள் அவளின் காதில் தெளிவாக விழுந்தது. ஆனால் அந்த வார்த்தைகளோ! அந்த வார்த்தையின் அர்த்தமோ அவளின் மூளைக்கு செல்லவில்லை.

"என்ன மா ?"

"ம்"

வைத்து விட்டு போன நகைகள் எல்லாம் அப்படியே இருக்கிறது. நீ ஏன் எதுவும் அணிந்துக்கொள்ளாமல் இருக்கிறாய்? உன்னுடைய முகத்தில் எவ்வித ஒப்பனையும் செய்யாமல் இருக்கிறாய்? நான் வைத்துவிட்டு போன பூ இப்பொழுது என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறது.

பேதை பெண்ணோ அமைதியாக தன்னுடைய தாயின் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்த பார்வையில் தான் எத்தனை கேள்விகள் ?

பதில்கள் கூற தான் யாரும் இல்லை! தன்னுடைய பெற்றோர்களின் ஆசைக்காக பெண் பார்க்கும் படலத்திற்கு அனுமதி அளித்தாலும் அவளின் மனம் மட்டும் இன்னும் அனுமதி அளிக்கவில்லை!

தன்னுடைய தாய் எடுத்து தங்க ஆபரணங்கள் அணிவித்தபோதும் , தன்னுடைய தலையில் மல்லிகை சூடிய போதும் அவளிடம் இருந்து எந்தவித உணர்ச்சிகளையும் பார்க்க முடியவில்லை. அவளின் முகத்தில் சந்தனம் பூசி பொட்டு வைக்க, கூட்டத்தின் முன்பு பொம்பையாக நின்றுக்கொண்டு இருந்தாள் பாவை.
© குந்தவை