...

5 views

The Seventh Day of Love
எல்லோரோட வாழ்க்கையையும் ஏதாவது ஒரு இடத்துல காதல்னு ஒன்னு இருக்க தான் செய்த அந்த காதல் எப்ப யாருக்கு புரியும் என்பதை தான் அந்த காதல் சேருமா சேராதா என இருக்கு!
எல்லா காதலுமே சொல்லி வச்சது போல சேர்ந்துட்டா அந்தக் காதலுக்கு என்ன மரியாதை அதே மாதிரி எல்லா காதலும் பிரிஞ்சிட்டா அப்பவும் மரியாதை இல்லை
புரியாத புதிரா இருக்கு இந்த காதல் புரிஞ்சுக்கணும் நினைக்கும் போது புரியாம போறதோ புரியவே வேணாம் நினைக்கிற எல்லோருக்கும் புரிகிறதும் எழுதப்படாத விதி!
இந்தக் காதலும் விதி மாதிரி தான் நினைக்கும் போதெல்லாம் கிடைக்காது ஒரு கட்டத்துல காதலே வெறுத்துப் போய் இருக்கும் போது அந்த நிமிஷம் கிடைக்கிற காதல் அந்தக் காதலை எப்படி வர்ணிக்க என எனக்கு தெரியல இத்தன வருஷமா காதல் வெறும் எழுத்த நினைச்சுட்டு இருந்தேன் எத்தனையோ கிறுக்கல்கள் இங்க கடந்து போயிடுச்சு ஆனா கடந்து போகாத ஒரே வார்த்தை காதல் மட்டும் தான் அந்த காதலை புரிஞ்சுகிட்டா எனக்கு ஒரு யுகம் தேவைப்படுது!
என்னோட புரிதல் ஒரு காதல் கதையா மாறுது அந்தக் காதல் கதை!
The Seventh Day of Love

எப்பவும் மெதுவா கண் முழிச்சு காலை சூரியனை கூட பாக்காத நான் அன்னைக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக தொலைதூரப் பயணம் போகணும்னு சொல்லி மூணு மணிக்கு எழுந்திருச்சு என்னோட ஊர் திருநெல்வேலி பைக் எடுத்துட்டீங்க ஏதோ போகலாம்னு நினைக்கும் போது மனசு சொல்லுச்சு நம்ம ஏன் கன்னியாகுமரி போக கூடாதுன்னு என்னோட கனவா இருக்கட்டும் என்னோட எழுத்துகளாக இருக்கட்டும் நான் வர்ணிக்கிற இடமா இருக்கட்டும் அதுல ஏதோ ஒரு பகுதியில கன்னியாகுமரி எப்பவுமே இருக்க தான் செய்யுது அந்த கடல் அலையும் அந்த கற்களும் அந்தப் பாறைகள் கடலுக்கு நடுவுல இருக்கும் பொழுது அதோட கடைசி பகுதியில் நின்னுகிட்டு காலையில இந்த சூரியனே பாக்குறது ஒரு வரம் தான்ல அந்த வரம் எப்பவாவது தான் கிடைக்கும் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பார்த்துவிடுவேன்
என் வாழ்க்கையில் இரண்டு தடவை இந்த அதிகாலை சூரியன ரசிச்சிட்டு இருக்கேன் இது மூணாவது தடவை அன்னைக்கு என்னவோ தெரியல என் வாழ்க்கையில் எல்லாமே வித்தியாசமா நடந்தது அன்னைக்கு ஒரு பக்கம் சூரியனை இன்னொரு பக்கம் நிலவுமா நான் சூரியனை பார்த்ததே அவளோட கருவிழியில் தான் அந்த நிலவு முகத்துல நான் கண்ட சூரியன் என்னன்னு சொல்லுவேன் என்னால வர்ணிக்க முடியலையே முதல் முறையாக அவளுடையதல்கள் பதில் சொல்ல மனசு மறக்குதே நினைக்கும் போதெல்லாம் என்ன மறந்தேன் சொல்லனும்னு ஆசைப்படுவதெல்லாம் எழுத தொடங்கின அவளாலேயே எழுதி எழுதி என்னோட கற்பனை அதிகமாகவே போயிடுச்சு சில நேரம் அவ தூரத்தில் தான் இருக்கிறார் அவளோட முகத்தை கூட நான் பாக்கல ஆனா மொட்டை மாடியில் இருந்து நிலவை பார்க்கும் போதெல்லாம் ஏன் அவன் பக்கத்திலேயே இருக்கிற மாதிரி தோணும் இது என்னால புரிஞ்சுக்க முடியாத ஒரு உணர்வு இதுதான் காதலா காதல்னா இப்படித்தான் இருக்குமா பைத்தியம் போல சிரிச்சிட்டு இருக்கேன் நீ அறியாம என்னால இது என்னென்ன விவரிக்கவே முடியல
அந்த நாள் என்னோட காதல் காவியத்தில் எழுதப் போற அந்த நாள் தான் முக்கியமான நாள் எனக்கு தெரியாம போச்சு பார்த்தது அஞ்சு நிமிஷம் தான் என அவளும் தனியா தான் வந்து இருந்தா பார்த்தவுடனே காதல் எப்படி வரும் அதுவும் அவளோட கண்களை பார்க்கும் பொழுது புரியாத புதிர் இப்போ வரைக்கும்
இப்ப வரைக்கும் அவளோட நினைவுகள் தான்
அத்தியாயம் ஒன்று பேருந்து பயணம்
ஓரமாய் கண்ட அவளின் நிழல் என் அருகில் நடமாடுவதை கண்டு சற்றே திரும்பிப் பார்க்கிறேன் அருகில் நின்று கொண்டிருக்கிறாள் அமர்வதற்கு இடம் இல்லை போல் என்னிடம் வந்து அருகில் அமரவா என கேட்டேன் என் மனது என்ன கோரும் அமர்ந்து கொள்ளிடம் விட்டுவிட்டு சிறிது நேரம் அமைதி மட்டும் சூழ்ந்து விட்டது!
முதலில் ஆரம்பித்தேன் அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடிக் கொண்டிருந்தேன் அவளே பேசும் மாயம் கடவுள் தான் செய்தாரா இல்லை காதல் தான் செய்ததா என்ன கேட்பது என்று தெரியாமல் அவளிடம் ஏதேதோ பிதற்றிக் கொண்டே இருந்தேன் சில நேரம் இந்த பயணம் தான் முடிந்து விடுமோ யோசிக்கிறீர்களே எனது பைக் எங்கே என்று காதல் அல்லவா கற்பனை காணாம போனதோ இருசக்கர வாகனம் சும்மா சொன்னேன் காலையில் தனியே வர நான் என்ன முட்டாளா என்னோட வா இருவரும் செல்லலாம் என நினைத்து கூடை ஒரு நண்பனை கூட்டி வந்தேன் அவன் காலை கொல்லர் தாங்காமல் எங்கே கட்டிங் கிடைக்கும் இடம் சென்று விட நான் மட்டுமே அவளை பார்த்தேன் திடீரென மனதில் தோன்றியது சரி பேருந்தில் செல்லலாம் என இவனும் கேரளா செல்ல வேண்டி இருந்ததால் அவனிடம் இருசக்கர வாகனம் கொடுத்துவிட்டு நான் பேருந்து ஏறினேன் ஆனால் காதல் செய்த மாயம் என்னவோ அவளே என் அருகில் இருக்கிறாள் இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த மாதிரி புரியாமல் தான் செய்த நேரம் அவனிடம் பிணத்தை கொண்டு இருந்தேன். அவளை கேட்க தொடங்கினால் என் பெயர் என்ன நானும் கூறிவிட்டேன் பெயரை இங்கே சொல்ல மனம் இல்லை அவளும் தன் பெயரை கூறி முடிக்க என்ன ஒரு பொருத்தம் காதலுக்கு எங்கே தெரியப்போகிறது பெயர் பொருத்தம் பற்றி எதுவாக இருந்தாலும் தனக்கான அவள் என நினைக்கும் மனம் இருக்கும் வரை யாவும் அழகு தானே அழகியலின் அடுத்த நொடியில் என் பைக்குள் உறங்கிக் கொண்டிருந்த என் அலைபேசி எழுப்பவே என் நண்பன் தான் என்னிடம் இருசக்கர வாகனம் கொடுத்துவிட்டு நீ சென்று விட்டாய், பெற்றோருக்கு நான் எங்கே செல்வது எனது புலம்பி கொண்டிருந்தான். அவனுக்கு ஒன்று தெரியவில்லை அவன் எப்படியும் பணம் இல்லாமல் வந்திருப்பான் என்பதால் அவனுக்கே தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஓரத்தில் பணத்தை மறைத்து வைத்து விட்டு வந்தேன்
எதற்காக நடந்தது ஏன் நடந்தது ஏன் என் புத்தி இப்படி செய்தது ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுதில் அவள் கேட்டால் நீ எங்கே செல்கிறாய் எதற்காக செல்கிறாய் என நான் கூறினேன்
காலைத் தவிர அவனைக் காண நானும் என் நண்பனும் வந்து கொண்டே இருந்தோம் காலை கதிரவன் காணும் பொழுதில் ஒரு நிலவின் இருவிழியில் நான் கண்ட கதிரவனை எப்படி மறப்பேன் இரு விழியும் இதழும் என் மனதை ஏதோ செய்திட இதற்கு மேல் என்ன தெரிய வேண்டும் இத்தனை இலைகளை நான் குமரியை கண்டதில்லை அவள் இரு விழியில் குளிர்காட்டில் அவன் இதழ் எண்ணெய் ஏதோ செய்ய அவளிடம் இருந்து விலகி சென்று மீண்டும் டெமாவளையை தேடிக்கொண்டே தோற்று போய் பேருந்தில் ஏறினேன் ஏனோ இந்த காதல் காதலை மட்டும் மறைத்து விட்டு அவளிடம் கூறினேன் காலை பொழுது உன் வதனம் கண்டு என்னை மறந்தேன் இப்பொழுது என் அருகில் நீ இருக்கிறாய் தவறாக எடுத்துக் கொள்ளாதே உன் இதை வெளியில் நான் தொலைந்து போனேன் கைதியானேன் சிறைவாசம் செல்கிறேன் என்னை மறந்தேன்
இது என்ன புதுவித மாயம் புரியாத போதை
பதிலுக்கு அவள் காலையில் என் முகத்தைப் பார்த்து அரண்டு போனவர் நீர் தானா தூக்க கலக்கத்தில் மறந்து போனேன் என்னை தேடியா சுற்றி கொண்டிருந்த எத்தனை நேரம் உனக்கு பின்னால் பார்த்திருந்தால் தெரிந்திருக்காதா
கடந்த ஒரு மணி நேரமாக உன் பின்னாடி தான் சுற்றிக்கொண்டு இருந்தேன் ஏனோ உனக்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை நான் எப்படி பேசுவோம் என அவள் கூற அந்த நொடியில் என்னை மறந்தேன் ஒன்றும் புரியவில்லையே இது தான் காதலா இல்லை நான் தான் எதுவும் கனவுலகத்தில் இருக்கிறேனா ஒரு முறை என்னை கிள்ளி பார்த்து மீண்டும் உறுதி செய்தேன் சரி நாம் நிஜத்தில் தான் இருக்கிறோம் என அவரிடம் பேசிய அரை மணி நேரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை அவளிடம் ஐந்து பயந்து எனது கைபேசி எண்ணை கொடுத்துவிட்டு இருவரும் ஒரே இடத்தில் இறங்கினோம் அப்பொழுது ஓர கண்ணில் அவளை பார்த்துவிட்டு செல்ல எனக்குள் ஏதோ ஒரு மாயை இந்த புரியாத புதிர் என்னதான் செய்கிறதோ அவளை கண்டி கிட்டத்தட்ட 16 மணி நேரம் ஆகிறது அந்த போதையில் இருந்து நான் வெளிவரவில்லை
ஒரு பெண்ணின் கண்களை இத்தனை போதை உருவாக்குமா தெரியாது போதையில் இருந்து நான் எப்படி தெளிய போகிறேன்
நாட்கள் செல்ல செல்ல அவள் நினைவுகள் என் மனதில் ஆழமாய் சென்று கொண்டிருந்தது நித்தம் விரைவில் தோன்றும் அந்த பயணம் மீண்டும் தொடராதா என இருந்தாலும் என்ன செய்வது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் பொழுது ஏமாற்றங்களும் அதிகமாக தானே இருக்கும் அவளிடம் கைப்பேசி என்னை கொடுத்து விட்டு சென்றவன் தான் இப்பொழுது வரை நொடிக்கு ஒரு முறை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவள் அழைப்பாளாய் என தேடலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தேடல் தொடரும்…

© அருள்மொழி வேந்தன்