...

1 views

உயர்ந்த உள்ளம் மனித நேயம்

உயர்ந்த உள்ளம் மனித நேயம்

துறைமுகம் அருகே ஒரு உப்பளம் . பல தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். தினசரி கூலி வேலை செய்து வருகின்றனர். தினமும் வெயிலில் எட்டு மணிநேர முதல் 10 மணி நேரம் வரை அயராது உழைப்பவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த தன் குடும்பத்திற்காக பாடுபடுபவர்கள். சுட்டெரிக்கும் வெயிலில் உப்பு கற்களை பார்க்கும் போது கதிர்வீச்சின் எதிரொளிப்பில் கண்கள் மிகவும் சூடாகும். வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் ஒப்பந்தத்தின்படி தினசரி கூலி ஆனது 150 ரூபாய் என்று பல வருடங்களாக வேலை பார்த்து வாங்கி வருகின்றனர். இப்பொழுது ஒப்பந்த காண்ட்ராக்டர்கள் மாறிவிட்டன. காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கி செல்வது மனைவிக்கு காய்கறி பலசரக்கு வாங்கி செல்வது மற்றும் கடன் வாங்கியதற்கு வட்டி கட்டுவது என்று பல பொறுப்புகள். இவருடைய சம்பள நாள் சனிக்கிழமை. சனிக்கிழமை வந்துவிட்டால் அவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கும். அப்படி இருக்கும் நிலைமையில் சம்பளம் வழங்கும் அதிகாரி அதிர்ச்சி தரும் வகையில் இனிமேல் தினசரி 100 ரூபாய் விதம் கணக்கில் சம்பளம் என்று சொன்னார். இது கேட்டு அனைவரும் மனம் துவண்டு வேதனை அடைந்தனர். கணேசன் என்ற ஒருவர் மட்டும் சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் சென்று என்ன ஐயா எங்களுக்கு சம்பளம் குறைத்தால் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவோம்? வாங்கிய கடனுக்கு எவ்வாறு வட்டி கட்டுவோம் என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரியோ இஷ்டம் இருந்தால் வேலையை பார் இல்லையெனில் வேறு இடம் பார்த்து சென்று விடு என்று சொன்னார். கணேசன் மனமுடைந்து மயக்கமாகி கீழே விழுந்தார்.
உடனிருந்த சக தொழிலாளர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர் .கணேசனிடம் அவருடன் பணிபுரிந்தவர்கள் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு ஆனால் இந்த காலத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று கேட்டார்கள். உன் குடும்பத்தை பற்றி யோசித்துப் பார்த்தாயா? என்று சொல்லி இருக்கும் வெளியே தக்க வைத்துக்கொள் என்று சமாதானப்படுத்தினர். அன்று மாலை சோகமாக வீடு திரும்பினார் கணேசன். கணவர் சோகமாக வருவதைகண்ட மனைவி அவருக்கு காப்பி கொடுத்து விட்டு அவர் ஏதோ மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்து கொண்டாள். கணவரிடம் என்று நம் பையன் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கி உள்ளான். மகள் நாட்டியத்தில் பரிசு வாங்கி வந்து இருக்கிறாள் என்று மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டாள். கணேசனும் சிறிது மகிழ்ச்சியடைந்தான் குழந்தைகளின் வெற்றியையும் ஆர்வத்தையும் கண்டு. மீண்டும் இன்று வேலையில் நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கு மனைவி உடனே தன் கணவரை சமாதானப்படுத்தினாள். இதற்கு போய் கவலைப்படாதீங்க. என் இரண்டு பவுன் தங்கச் சங்கிலி அடகு வைத்து கடனை அடைத்துவிடலாம். நகை எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கடனை அடைத்து விடுவோம் என்று சமாதானம் சொன்னாள். சரி என்று கேட்டு மகிழ்ந்தார். இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். என் கணவருக்கு நல்ல மன தைரியம் கொடு இறைவா என்று மனம் உருகி வேண்டினாள். மனிதநேயம் இல்லாமல் இந்த மனிதர்கள் அடுத்தவர்கள் பணத்தை எடுத்து கொண்டு வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களிடம் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று தனக்குள்ளேயே சொல்லி வேதனை அடைந்தாள். அடுத்த நாள் கணேசன் வேலைக்கு சென்றார். நாட்களும்நகர்ந்தது.நோய்த்தொற்றுபரவை மக்கள் பீதியடைந்தனர். அடுத்த வாரம் சனிக்கிழமையும் வந்தது. காலையில் வங்கி சென்று தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய போதுமான பணத்தை எடுத்துக்கொண்டு அதிகாரி தனது வாகனத்தில் உப்பளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரும் பல சிந்தனைகளுடன் வாகனத்தை ஓட்டி வந்தார். நோய்த்தொற்று மற்றும் லாக் டவுன் சரிவர உப்பு ஏற்றுமதி இல்லை என்பது அவர் மனதில் சிந்தனைகளாக ஓடிக்கொண்டிருந்தன.
சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் சீட் பெல்ட் போடாமல் கைபேசியில் பேசியவாறு வாகனத்தை ஓட்டி வந்தார்.எதிரே வந்த கனரக வாகன ஓட்டுநர் சற்று கண் அயர்ந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை மீறி இவர் கார் எதிரே மோதிக்கொண்டது. இந்த அதிகாரியும் சீட் பெல்ட் போடவில்லை கைபேசி பேசிக்கொண்டிருந்ததால் விபத்தை இவரால் தவிர்க்க முடியவில்லை. டமால் என்ற சத்தம் உப்பளத்தின் வெளியே கேட்டது. பேரிரைச்சல் கேட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியே திரண்டு வந்தனர். நம் அதிகாரி கார் மாதிரி அல்லவா இருக்கிறது என்று ஓடோடி வந்தனர். ஆம். அவர் கார் தான். அவர் எங்கே என்று அங்கும் இங்கும் அலைமோதி சென்று பார்த்தனர்.

அவர் மயங்கிய நிலையில் ரத்தவெள்ளத்தில்காரினுள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து இறைவா என்ன சோதனை காப்பாற்று என்று சொல்லிக்கொண்டே 108 ஆம்புலன்சை அழைத்தனர். சீக்கிரமாக வாங்க. எங்க அதிகாரி உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கிறார். அவரை காப்பாத்தனு ம்சீக்கிரமா வாங்க என்று அழைத்தவுடன் 108 ஆம்புலன்ஸ் வந்தது. கணேசனும் நடேசனும் நாங்களும் ஆம்புலன்சில் வருகிறோம் என்று மருத்துவமனைக்கு விரைந்தனர். கணேசனும் நடேசனும் அதிகாரியின் உறவினர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களும் உடனே வந்து விட்டனர். மருத்துவர் பரிசோதித்துவிட்டு பலமாக அடிபட்டு ரத்தம் வெளியேறி இருப்பதால் உடனே ரத்தம் தேவை என்றும் அவருக்கு ஓ பிரிவு ரத்தம் நெகட்டிவ் பிரிவு ரத்தம் என்று சொன்னார். கணேசனும் நடேசனும் மருத்துவரிடம் எங்களுக்கு எந்த இரத்த பிரிவு என்று சோதித்து அவருக்கு பொருத்தமானால் எவ்வளவு ரத்தம் வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா என்று கெஞ்சினர்.
மருத்துவரும் கணேசன் நடேசன்இருவரின்இரத்த பிரிவை சோதித்து விட்டு பொருத்தமாக இருப்பதால் இருவரிடமும்4யூனிட் ரத்தம் எடுத்துக்கொண்டார். சற்று நேரத்தில் நினைவு திரும்பி விடுவார் என்று மருத்துவர் கூறினார். மருத்துவர் அதிகாரிக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். ரத்தம் ஏற ஏற உடல் வெப்பமும் சீராகி சிகிச்சை பலன்தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்பதை மருத்துவர் கணேசன் நடேசனிடம் கூறி நன்றி தெரிவித்தார். எல்லாம் வல்ல இறைவன் அருளால் சிகிச்சை பலம் அளித்து நலம் ஆகிவிட்டார். ஒரு வாரம் கழித்து பூரண குணமடைந்தார் அதிகாரி. மருத்துவர் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறினார். டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தில் மருத்துவர் அதிகாரியிடம் கணேசன் நடேசன் இருவர் அளித்த இரத்தத்தில் தான் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள் என்று கூறினார். அதிகாரியின் குடும்பத்தினர் இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் கண்ணீர் மல்க நன்றி என்று கூறி வார்த்தைகள் வரவில்லை தக்க தருணத்தில் உங்கள் உதவிக்கு என்று கூறினார். நீங்கள் குடும்பத்துடன் இருவருக்கும் ஒரு சிறு நன்றி தெரிவியுங்கள் என்று சொன்னார்.
அதிகாரி தன் தவறை உணர்ந்தார். அவர்கள் பணத்தை சுரண்டியது தனக்கு நேர்ந்தது என்ன என்பதை உணர்ந்து மனவேதனை அடைந்து அனைத்து ஊழியர்களுக்கும் அதிக சம்பளம் வழங்குவதற்கும் விடுபட்ட போன சம்பளத்தை திருப்பி கொடுப்பதற்கோ நம்ப உதிரம் அளித்து உயிர்ப்பிச்சை அளித்த ஊழியர்களை என் உயிர் உள்ளவரை மறவேன் என்று கண்ணீர் மல்க அவர்களின் பரந்த மனதை பாராட்டினார். ஊழியர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். மனிதநேயம் உயிர்ப்பித்து துளிர் விட்டு தழைத்தது. பூந்தளிர் ஆக தளிர்விட்டது தரணியில்.
வளர்க மனித நேயம்ஊழியர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். மனிதநேயம் உயிர்ப்பித்து துளிர் விட்டு தழைத்தது. பூந்தளிர் ஆக தளிர்விட்டது தரணியில்.
வளர்க மனித நேயம்.
© KaviSnehidan