...

2 views

The Seventh Day of Love
காதல் அத்தியாயம் 2
இத்தனை நாட்கள் கனவில் மட்டுமே அவளைக் கண்டேன் என் கற்பனைக்கு என்ன தான் ஆனதோ அவள் முகம் மட்டுமே மனதில் அமைந்திருக்க விருதும் வார்த்தைகள் யாவும் அவளுக்காகவே எழுதுகிறதே இது என்ன மாயம் புரியாத பாதையில் செல்ல மீண்டும் ஒருமுறை சந்திக்க மாட்டேனா மனதும் ஏங்கி கொண்டிருக்கிறது இந்த காலம் எத்தனை மாயம் செய்கிறது இத்தனை நாட்கள் கனவிலும் நினைவிலும் அவள் முகம் பதிந்திருக்கும் திடீரென என் கண்முன்னே தோன்றினாள் நிச்சயமாக இதை நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை என் கனவுகள் மட்டுமே சொந்தங்களின் முகங்கள் நிஜத்தில் காணும் பொழுதில் என்னை நான் மறந்து போகிறேன் சிலையாய் சென்னை நடுவே நான் நின்று கொண்டிருக்க என்னை கடந்து செல்லும் அவளின் முகம் என் காதல் தானா இந்த காதல் அவசியத்தை நாட்கள் அவளிடம் கூறி விட அத்தனையும் ஆசை தானா என்னவோ கடந்த காலத்தில் அவளின் முகம் மட்டுமே மனதில் நிறைந்திருக்க ஒரு தலை காதல் இத்தனை அழகாய் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவளின் அருகில் நன்றி கொண்டிருந்தேன் அவளும் கண்டு கொள்ளவில்லை நானும் அவளைக் கண்டு கொள்ள மறந்து விட்டேன் ஏனென்றால் மனம் முழுதும் அவள் நிறைந்திருக்க என் செய்வேன் நானும் அவள் சென்னை தான் என அறியாமல் இத்தனை நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தேன் தனிமையை தேடி அவள் சுற்றி தெரிய தனியாய் அவளை தேடி நான் சுற்றி தெரிய இந்த காதலும் காலமும் என்னதான் செய்கிறது எங்கள் இருவரையும் வைத்து அவள் மனதில் தோன்றமா என் எண்ணங்கள் யாவும் இத்தனை நாட்கள் என் மனதில் அவள் சூழ்ந்திருக்க அவள் மனதில் ஏதேனும் ஒரு மூலையில் நான் அமர்ந்திருப்பேனா என என் மனம் ஒரு ஓரத்தில் கேட்க அவள் என்னை கண்டுகொண்டால் என்ன கண்டு கொள்ளாவிட்டால் என்ன என் மனம் முழுவதும் அவள் தான் இருந்திருக்கிறாள் எனக்கொரும்பொழுதே அனைத்துமே மறந்து போய் மொத்தமாய் அவளிடம் சரணாலயம் என் இதயத்திடம் என் சொல்வேன் நான் அறிவு ஒருபுறம் இது தவறு எனக் கூறினால் மனமே கேட்க மறுக்கிறதே இதை இத்தனை நாட்கள் அவளை நினைத்து என் பேனா முனையும் தெரிந்து கொள்ள எத்தனை புத்தகங்கள் கடந்து இருக்கும் அவள் பெயர் பேனா மையம் தீர்ந்து செல்ல புத்தகமும் தீர்ந்து செல்ல அவனுக்காக எழுதிய கவிதைகள் மட்டும் ஆயிரத்தை தாண்டி சென்றது. நானா இப்படி என யோசிக்கும் பொழுது என்னால் நீ இப்படி என அவள் யோசிக்க வைத்தால்
இரண்டாம் முறை அவளை பார்த்தோம் பாராமல் சென்ற மனதின் வலிகள் மீண்டும் என்னை பெரிதாய் காயப்படுத்த என் செய்வேன் நான்
மூன்றாம் நாள் காலை நினைத்து கூட பார்க்க வேண்டிய அவளை மீண்டும் அங்கே சந்திப்பேன் என ஆனாலும் சந்தித்தேன் அவளை தூரத்தில் அவளும் அழகாய் அவள் சிரிப்போம் ஓரத்தில் இன்று நான் ரசித்துக்கொண்டிருந்தேன் அவளிடம் போய் பேச மனம் எத்தனையோ சமீகள் செய்து கொண்டிருந்தாலும் ஏனோ அவளிடம் நெருங்க அத்தனை ஆசை இல்லை தூரத்தில் இருந்தாலும் அவள் இதழ் சாயம் என்னவென்று யோசித்துக் கொண்டே இருந்தேன் இது என்ன மாயம் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தேன் தூர தேசத்து இளவரசி அவளை
எத்தனையோ கதைகள் நான் படித்திருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இவள் போல யாரையும் அங்கே வர்ணித்ததும் இல்லை வர்ணிக்க அப்பொழுது இவளை போல் யாரும் இல்லை என்று அர்த்தம் தானே இவள் ஏன் இத்தனை அழகாய் இருக்கிறாய் என் மனதை வருடி செல்கிறார் காயமும் உண்டாக்கிறாள் கவிதை பாட வைத்தவள் கதை கிறுக்க வைத்தவள் கண்களால் மாயம் செய்தவள் இவ்வளவு நாட்கள் செல்ல செல்ல நான்காம் நாளை ஐந்தாம் நாள் ஆறாம் நாள்
ஆறாம் நாள் இரவில் நானும் அவளும் தனியே ஆற்றங்கரை ஓரம் அமைந்திருந்த பூங்காவில் அவளிடம் பேச யோசனை செய்து கொண்டிருந்தேன் அவளை என்னை தேடி வந்த என்னிடம் கேட்டால் எத்தனை நாட்கள் என் பெண் சுற்றிக் கொண்டிருக்கிற ஒரு முறையாவது என்னிடம் பேச வேண்டும் என தோணவில்லையா எப்படி தோணும் உன் அழகில் மயங்கி நிற்கும் என்னிடம் வந்து கேட்கிறாய் இப்பொழுது கூட என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பேசுகிறேன் என்ன செய்ற என்னை நீ எத்தனை நாட்கள் காதலில் மூழ்கி முத்து எடுக்க சென்று இப்பொழுதுதான் மூச்சைரைக்க மேல் வந்தது போல இருக்கிறதே மொத்தமா மூழ்கி விடுவேனோ என்று எண்ணத்தில் மனதில் ஏதோ குறித்து நம்பிக்கையில் சென்னை வந்தேன் முதல் நாள் உன்னை பார்த்தேன் என்னை மறந்தேன் இரண்டாம் நாள் தொலைத்தேன் மூன்றாம் நாள் உன் அருகில் இருந்தும் பேசும் மனமில்லை என்னடி செய்தாய் நீ நான்காம் நாள் ஐந்தாம் நாள் உன் பின்னே நடந்த வந்தேன் எங்கே செல்கிறாய் என ஏனோ இப்பொழுது உன்னிடம் பேச வார்த்தைகள் இல்லை என்னிடம் ஒருமுறையாவது அழைத்து இருக்கலாமே உன் குரல் கேட்க அத்தனை நாட்களில் காத்துக் கொண்டிருந்தேன்
அவள்: மறந்தாயோ நீ எந்த நாட்களில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் நாளை காலை உன்னை காண வேண்டும் உன்னிடம் நான் ஒன்று கூற வேண்டும் அதில் மொத்தமாய் நான் உன்னிடம் சேர வேண்டும் இப்பொழுது என் மௌனம் மட்டுமே உனக்காக நீ என்ன பேச வேண்டும் என்கிறாயோ பேசி விட்டு செல் உன் அருகில் நான் சிலையாய் இருக்கிறேன் இத்தனை நாட்கள் என்னை தொலைத்து விட்டாய் என நீ நினைத்துக் கொண்டிருந்த உன் அருகில் தான் இருந்தேன் ஏனோ உன்னிடம் பேச மனம் இல்லை உன்னை தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டிருந்தேன் நீ எப்பொழுது என்னை தேடி சென்னை சென்றாயா உன்னோட நான் வந்து கொண்டிருந்தேன் என்னை நீ தேடினாய் தவிர உன் அருகில் பார்க்கவில்லை உன் அருகில் தான் இருந்தேன்
நான்: கதைகள் எழுதும் என்னிடமே கதைகள் மறைக்கிறாயே உன்னை நான் என்ன சொல்வது என்னருகில் தான் இருந்தாய் என்று கூறுகிறாய். என் இதயத்தில் அல்லவா நீ இருந்தாய் என்னை நானே புதுவிதமாய் பார்க்கும் மாயம் செய்தாயாடி உன்னை நான் இப்படி காணும் வரை
மீண்டும் ஒருமுறை இந்த பயணம் என் கண் முன்னே வருகிறது
நிலவின் இதை வெளியில் கண்ட கதிரவனையின் ரூம் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் வாகனத்தில் கதிரவன் கரைந்ததோ இல்லையோ நான் கரைந்து விட்டேன் இதழ் சாயத்தில் சரி பிடித்த நீ சென்று விட்டாய் உன் அருகில் நான் இருக்கும் பொழுது உன் தோள் மீது சாய அத்தனையா முதல் காதல் முதல் பார்வையில் இதுதான் என நான் உணரும் தருணம் நீ தொலைதூரம் சென்று விட்டாய் உன் அருகில் இருந்த இரு மணி நேரம்
ஒரு பேருந்து பயணம் வாழ்க்கையை மாற்றி விடுமாம் அறியேன் நானும் உன் அருகில் கடந்த நாளிகைகள் என் மனதில் ஒவ்வொன்றாய் பதிந்து இருக்க நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் என்னென்னவோ செய்கிறது உன்னிடம் பேசி சில வார்த்தைகள் மனதில் ஆழமாய் பதிந்திருக்க தினம் தினம் என் இரவில் வந்து நித்திரை அனைத்தும் கலைத்து விட்டு சென்ற விடுகிறாய்
அவள்: காலை உனக்காக காத்திருக்கிறேன் எங்கே என தேடி கண்டுபிடி இந்த தேடலில் நீயும் நானும் இணைவோம் என காத்திருக்கிறேன் பார்ப்போம் நாளை காலை
நீ மறந்துவிட்டாய் எனக்காக எழுதிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் யாவும் வாசித்து முடித்து விட்டேன் ஆனால் ஏன் அதில் இத்தனை சோகம் நீ எழுதிய கவிதைகளில் உன்னிடம் தானே இருக்கிறேன் ஏதோ நீ என்னை சோகத்தில் வைத்திருக்கிறாய் இந்த காதலை உணர மறுத்துவிட்டாய் மீண்டும் ஒரு ஆயிரம் கவிதை எழுது தினம் தினம் எனது ஒவ்வொன்றாய் வாசித்து பார்க்கிறேன் சோகம் நேர்ந்த காதல் கவிதைகள் என் மனதை ஏதோ செய்து விட்டதே இருந்தாலும் பரவால்ல அந்த சோகத்திலும் என் மீது வைத்த காதல் நான் உணர்ந்தேன் இதை போல் யாராவது காதல் செய்து இருக்கிறார்களா என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா மனதில் இத்தனை காதல் வைத்திருக்கிறாய் நான் உனக்காக என்ன செய்தேன் இதுவரை உனக்காக எதுவுமே செய்யவில்லை தினம் தினம் நீ என்னை தேடி வரவே நான் ஒதுங்கி சென்று இருக்கிறேன் என் மீது உனக்கு கோபம் இல்லையா
உன் மீது கோபப்பட என் மனம் தான் இடம் கொடுக்குமோ கோபம் வந்தால் என் மனம் அல்லவா பாதிப்படையும் மனம் உன் மீது கொண்ட காதல் மகிமைக்கு மனம் சொல்வதே கேட்டுக் கொண்டிருக்கிறேன் இத்தனை நாட்களாக ஒரு முறை உன் வதனம் காணவே இங்கே வந்தேன் இப்போது நாளை காணலாம் என்கிற என்னதான் சொல்ல வருகிறாய் என்ன சொல்ல போகிறாய் இந்த காலங்கள் எத்தனை மாயம் செய்தது அந்த காலை வேலையும் அந்தப் பயண வேலையும் இரவில் தினமும் நித்திரை எல்லாம் தொலைத்த தூக்கமோ இல்லை நான் எழுதி தீர்த்த பேனா மையம் எதுவுமே இங்கே என்னிடம் இல்லை ஆனால் உன் வதனம் தவிர சுத்தமாய் மனதில் பதிந்து போன உன் வதனத்திடம் நான் கேட்கிறேன் கேள்விகள் பல இரவில் ஆனால் மறைக்கிற சில வார்த்தைகள் கொண்ட என் செய்வேன் நான்.
உன்னிடம் கூற வேண்டும் என பல ஆசைகள் மனதில் இருக்க வார்த்தைகள் தினம் தினம் தேடி தொலைந்து போகிறேன் வர்ணிக்க தமிழில் அத்தனை வார்த்தைகள் இருந்தும் உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடி சுற்றுவது என் வேலையானது ஆனாலும் இந்த காதல் செய்த மாயையில் அனைத்தும் மறந்து போய் உன் பெண்ணை சுற்றிக் கொண்டிருக்கிறேன் இத்தனை அரிய காதல் என் மனதில் தோன்ற அந்தக் கடல் நீரும் கடல் காற்றும் கடல் மலரும் சேர்ந்து என்னதான் செய்கிறது தென்கோடி முக்கில் உன்னை கண்டு மனம் தொலைத்து விட்டேன் மீண்டும் ஒரு முறை தொலைத்த விட மனமில்லையே சரி காலை பார்ப்போம் நீயும் நானும் எங்கே என நான் காலையில் யோசிக்கிறேன்
என் மனது உன் மனதும் ஒன்றாக யோசித்தால் அங்கே காண்போம் நாளை காலையில் இப்பொழுது சென்ற வீடு என்னை திரையில் உன் வதனம் கண்டு நான் மூர்ச்சடைய வேண்டும்


© அருள்மொழி வேந்தன்