...

3 views

இரகசிய கதவுகள்
அரசர்கள் ஆட்சியில் மாபெரும் நகரத்தில் ஜாப்திகிரி கோட்டை. ராஜாக்கள் ஆண்ட காலத்தில் பெயர் பெற்று விளங்கியது, அதனின் அருகாமையில் சிவகிரி என்ற மிக பெரிய கிராமம்,
தொன்றுதொட்டு வரும் அந்த கிராம கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளுவதற்காகவும், அவ்போழ்து சில தினங்களுக்கு மன்னர்கள் ஒய்வு எடுப்பதற்குக்காவும் சிவகிரியில் பெரிய அரண்மனை உள்ளது. அந்த அரண்மனை இருந்து நகரத்திலுள்ள அரண்மனை க்கும் இணைக்கும் சுரங்கள் இருந்து வந்தன யென்று கிராம மக்கள் கூறி வருகின்றனர், இன்று யளவும் அங்குள்ள அரண்மனையில் ஆறு இரகசிய கதவுகள் இருக்கின்றன யென மக்களால் பேசப்படுகிறது.
அந்த அரண்மனை நுழைவாயிலிருந்து நுழைந்து உடனே மிக பிரம்மாண்டமான பெரிய வரவேற்பு அறை முகப்பு எதிராக மேற் தளத்திற்கு செல்லும் படி கட்டுகள் பறவை இறக்கை போல் மேற் தளத்திற்கு செல்கிறது, ஒவ்வொரு படி கட்டு லிருந்து தேக்கு மர சிறியதூண்கள் கை பிடித்து செல்வதற்கு அரை விட்டம் தேக்கு மர கை இரயில் கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது, சுவர்கள் முழுவதும் பத்தடி உயர த்துக்கு தேக்கு மரங்கள் சுவர் உடன் இணைக்க பட்டுள்ளது, நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது, கம்பீரமாக காட்சி அளிக்கிறது, அவ்வாறு மேற் தளத்தில் சுற்றிலும் தங்கும் பெரிய அறைகள், அறையின் அரை விட்டம் கூரையின் உட்புறம் வண்ண கோலங்கள் போல் ஓவியங்கள், கண்ணுக்கு மட்டும் அல்ல மணதற்க்கும் இதமாக யுள்ளது.
இதனை அடுத்தாற்போல் இரண்டாம் பெரிய அறை உள்ளது, இங்கு தான் அரசர்கள் அமர்ந்து ஓய்வு பெறுவார்கள், இரகசிய சந்திப்புகள் நிகழத்துவார்கள் என்று கிராம மக்களால் சொல்ல படுகிறது, அங்குதான் ஆறு இரகசிய கதவுகள் இருக்கின்றன என்றனர்,
ஒவ்வொரு கதவுகள் திறந்த போது தெரிகிறது அங்கே மேற் கொண்டு போக வழி இல்லை முழுவதும் சுவர் தான், ஆறு கதவுகளில் ஏதாவது ஒன்று வழி இருக்கும் நினைத்தால் அது தான் இல்லை அனைத்து மே சுவர் தான், என்ன ஏமாற்றம் வேலை கிராம மக்களை கேட்ட போது அது அவ்வளவு தான் என்றனர்.
கிராம மக்களில் ஒரு பெரியவர் கேட்ட போது அந்த ஆறு இரகசிய கதவுகள் ஒன்றுக்கு ஒன்று இடைப்பட்ட தூரத்தில் சுவர்கள் மீது வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது, அந்த சுவர்களில் ஒரே இடத்தில் இரகசிய கதவு உள்ளது, அது சாதாரண மாக திறந்த விட முடியாது இராஷ்ட பளு இருக்கும் நகர்த்த முடியாது திறக்க முடியாது, எடை பல டன்கள் இருக்கும், திறக்க வேண்டும் என்றால் அங்கே இரகசிய சக்கரம் சுழற்ற வேண்டும், அங்கே இரண்டு கிணறு கள் அமைக்க பட்டுள்ளது, அதிலில் இந்த இரகசிய கதவின் எடைக்கு சமமான எடையுள்ள பறைகள் அந்த இரண்டு கிணற்று லும் தொங்க விட பட்டு யிருக்கும், ஒன்று கிணற்றின் அடியில் இருக்கும், மற்றொன்று கிணற்றின் மேலே இருக்கும், இவற்றின் மூன்றின் பாகங்களுக்கும் இரும்பு இணைப்பு பலமான வயர்கள் இணைக்க பட்டுள்ளது,
அந்த இரகசிய சக்கரம் சுழற்றும் பொழுது அந்த மகா பளு கொண்ட இரகசிய கதவு இலகுவாக திறக்க முடியும் இது தான் இரகசியம்.
ராஜாக்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்றால், உயிர் க்கு ஆபத்து என்றால் தப்பித்து செல்லவும், அது மட்டுமல்ல மன்னன் மன்னர்கள் தனது பெண் ஆசைகளை தீர்த்து கொள்ள இரகசிய வழிகளில் பயன்படுத்தி வந்தனர் என்று அந்த பெரியவர் மிகவும் அருமையாக தெளிவு படுத்தினார்.
- முற்றும்-


© G.V.KALASRIYANAND