...

28 views

நாயகன் பாகம் - 2 மேற்கோள்


வணக்கம்,

நாயகன் பாகம் - 2 கதையில் இடம்பெற்று இருந்த மேற்கோள்.

1.  நீயே
அனுபவித்து,
உணராத வரை
எதுவும் புரியாது.!

2. அடுத்தவர்களின்
விமர்சனத்தைப்
பற்றி கவலை கொள்ளாதே.!

தேங்கிக் கிடக்கும்
குட்டை தான்
கல்லெறிந்தால் கலங்கும்,
ஓடும் நதி கலங்குவதில்லை.!!

3. அறிவு மௌனத்தை
கற்றுத் தரும்.

அன்பு பேச
கற்றுத் தரும்.

4. நான் ஒன்றும்
இதயமற்றவள் அல்ல,
என் இதயத்தை
குறைவாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டவள்.

5.நீங்கள் தான்
உங்கள் வாழ்க்கையின்
கதாசிரியர்.

உங்களின் கதை,
நீங்கள் விரும்பும்படி
செல்லவில்லை என்றால்,

அதை மாற்றி எழுதுங்கள்.!

6. சில கதைகள் பேனாவால் எழுதப்படுகின்றன,

சில கதைகள் வலியால் எழுதப்படுகின்றன.


7. அன்பு
நிறைந்த
உள்ளத்திலே,
இருப்பதெல்லாம்
இன்பம்.!

8.நுண்ணறிவின்
உண்மையான அடையாளம் 
அறிவு அல்ல, கற்பனை.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

9. அறிவை விட
கற்பனை தான்
முக்கியமானது.
ஏனெனில், கற்பனை
தான் உங்களை உலகம்
சுற்ற வைக்கிறது.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

10. எளிதாக நான் கிடைத்ததால் தான் பயன்படுத்தி கொண்டீர்களா??

மன்னிக்கவும். 🙏🏻

இனி அதற்கு வாய்ப்புகளை தரப்போவது இல்லை.

எனக்கு நான் வேண்டும்.

11. இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது.

இனி வாழப்போகும் வாழ்வை அறியவும் முடியாது.

கற்று கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது.

12. என்னை பற்றியும்,
என் குணத்தை பற்றியும் விமர்ச்சிப்பது மிகவும்  எளிதானதுதான்.

நான் பயணித்த,
அதே பாதையில்,

நீங்கள் பயணம்
செய்யாத வரையில்.

13. உன் அன்பு யாருக்கு பலமோ,
உன் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ,
உன் புன்னகை யாருக்கு தேவையோ,
உன் மௌனம் யாருக்கு கண்ணீரை வர வைக்குமோ,
உன் பிரிவு யாருக்கு துன்பத்தை தருமோ,
உன் நினைவு யாருக்கு பொக்கிஷமோ,
அவரே உன் உண்மையான உறவு.!!!

14. நீங்கள் திரும்பிச் சென்று
உங்களின் கடந்த காலத்தை
மாற்ற முடியாது.

ஆனால்,

நீங்கள் நினைத்தால் இருக்கும்
இடத்திலிருந்து தொடங்கலாம், முடிவை மாற்றலாம்.!!

15. வாழ்வில் சில திருப்பங்கள் கடுமையானவை தான்.

ஆனால்,

பாதையைத் தொடர்வதற்கு
கடந்து தான் ஆகவேண்டும்.!

16. வாழ்க்கையில் இரண்டு நண்பர்களை சம்பாதியுங்கள்.

கிருஷ்ணனை போன்று ஒருவர், உங்களுக்காகப் அவர் போராட மாட்டார், ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

கர்ணனைப் போன்ற மற்றொருவர்.
நீங்கள் தவறு செய்த போதும் உங்களுக்காகப் இறுதி வரை போராடுவார்.

நான் கர்ணன் 💜


17. கெஞ்சி கேட்க
கூடாதது காதல்.!

பிச்சை எடுக்க
கூடாதது அன்பு.!

கேட்டு பெற
கூடாதது அக்கறை.!

புரிய வைக்க கூடாதது உணர்வுகள்.!

18. உங்களின் வயதும்,  நீங்கள் வாழ்ந்த ஆண்டுகளும் அல்ல.!

இழப்பும், சேதாரமும்,
வலியும் தான்
உங்களை முதிர்ச்சியடைய செய்யும்.!

19. நீங்கள் ஒருவரை ஏமாற்றி விட்டால், அவரை முட்டாள் என்று நினைக்காதீர்கள்.

நீங்கள் ஏமாற்றியது அவர்
உங்கள் மேல் வைத்திருந்த
முழு நம்பிக்கையை.!


20. உன்னுல் மாற்றம்
வந்தால்,
உன்னை சுற்றியும்
மாற்றம் வரும்.!

21. ஆதீதங்கள் எல்லாம்
அழ வைக்காது
விடுவதுமில்லை.!

காயங்கள் இல்லாமல்
காலம் எதையும்
கற்றுக்கொடுப்பதுமில்லை.!

22. கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ மரமாகவோ,
மாற்றி கொள்கின்றன விதைகள்.

விழுந்து விட்ட வலி
எழுந்து விட்டால்
மறைந்து விடும்.!

23. சில நேரங்களில்
துன்பம் உங்களைப்
பிடித்து வைக்கவில்லை,
நீங்கள் தான் துன்பத்தை பிடித்து வைத்திருக்கிறீர்கள்.

24. இயலாதவன்
எடுக்கும்
இறுதி
ஆயுதம்

" விமர்சனம் "


25. ஓடும் நதி வீழும்
அருவியாக...

அருவியாக நான்
வீழ்ந்ததெல்லாம்..

பெரும்நதியாக எழுந்து
ஓட தான்..

நதி பாயும் 💜


26. அன்பு என்பது வார்த்தை அல்ல,
அது உலகத்தை இயக்கும்
மந்திரம்.

என்றும் அன்புடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்.

அன்பு அனைத்தும் செய்யும் 💜
சுய அன்பு அற்புதங்கள் செய்யும் 💜

நன்றி 🙏🏻



© GMKNOVELS