...

9 Reads

நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடையமாவினை மாணப் பொதிகிற்பார், தீவினைஅஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? 218

நாவினால் ஒருபொருளை இரந்தாரது குறைவினை அறிந்து தம்மிடத்தில் உள்ள செல்வத்தை மாட்சிமைப்படக் கரத்தலைச் செய்வார் தீய செயல்களுக்கு அஞ்சினால் அவர்கள் அடையும் நன்மையாது? அஞ்சாதொழியின் அவர்கள் அடையும் தீமை யாது? பார்வை இல்லாத கண் மூடியிருந்தா லென்ன தீமை மூடியிராது திறந்திருந்தாலென்ன நன்மை?

கருத்து: இரப்பார்க்கு கரக்கும் தீவினையே ஏனைய அறங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் ஆற்றல் மிக்கது. தீவினையாயவற்றுள்ளும் தலை சிறந்தது.