...

13 Reads

பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,

கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!- மரம் குறைப்ப மண்ணா, மயிர்.

215

கன்றினை உடைய பசு வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே! மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள் பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வம் பெற்றாலும் - செல்வத்தை ஒருகாற் பெற்றாலும் வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர் தாமுந் துய்த்தலுமிலராகி பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது என்னோ என்றவாறு.

கருத்து:கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப்பிடித்தல் அடாத செய்கையாம்.