...

7 Reads

இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம், வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,

பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான்

ஆயின்,

நசை கொன்றான் செல் உலகம் இல்.

225

தன்னால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுத்தலும் கூடாதவற்றை இல்லை யென்று கூறுதலும்

ஒருவனுக்குக் குற்றமாகாது அவை பெரியோர்களது செயல்களாம் அவ்வியற்கையின்றி கொடுப்பான் என்று

மனதின்கண் விரும்பி நின்றான் நிற்க தன்னிடத்துள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணாதவனானால் நிற்பானது விருப்பத்தைக் கெடுத்தானாதலால் செல்லுகின்ற

மறுமை உலகத்தின்கண் இன்பம் அடைதல் இல்லை.

கருத்து: தன்னிடத்துள்ளதைக்கொடாதவனுக்கு மறுமையுலகத்தின்கண் இன்பம் இல்லை. உலகம் ஆகுபெயர்.