...

2 Reads

தங்கமகள்

குடிசை வீடா
இருந்தாலும் குடிக்க...

கஞ்சி தண்ணி
இல்லாம போனாலும்...

வறுமையிலே சிக்கி
தவித்தாலும்வாழ்க்கையிலே....

வசந்தமே காணாமல்
போகின்ற போதிலும்...

வீட்டுக்குள்ளபத்துப்புள்ள
இருந்தாலும் அழகில்லை...

ஒத்தப்புள்ள பெண்புள்ள இருந்திட்டா உலகமே அதுக்குள்ளே...

களைச்சிவர்ர அப்பனுக்கு
கஞ்சிதண்ணி கொடுக்குறதும்..

உழைச்சு தந்த
காசிலதான் வடிச்சு...

சோறும் பரிமாறும்போது
அவளும் தாயிபோலத்தான்...

வாசல் தெளிச்சு
கோலம் போட்டு...

வறுமையை மறக்க
செய்யும் சாமிதான்...

மல்லிகைப் பூ
தலையில்வச்சு...

முகநிறையபுன்னகையை
பொழுத்துக்கும் பூக்கவைக்கும்..

தங்கமான தங்கமகள்
தான் தகப்பனுக்கு..!!

கவிஞர் ஆ. செபா
கீழ ஈசனூர் -நாகப்பட்டினம்