...

0 views

நட்பு
யாரோ அவன் யாரெனே அறியா அவன், அறியும் முன் அன்பாய் பேசிய அவன், நட்பாய் என்னோடு ஒட்டிக்கொண்டவன், இரு விழியில் ஒரு விழியில் நீர் வந்தாலும் பாதம் நிலம் படமால் ஏந்தி கொள்ளும், நண்பன் அவன்.
மழை மேகம் சூழ மாலை நேர தென்றல் அணைத்து கொள்ள பனி விழும் இரவின் திரையில் தோன்றும் நட்சத்திர கூட்டம் நடுவே நிலவாய் அவன் இருக்க. நடுவே காணாமல் போகும் அவனும் தோன்றி மறையும் கோவமும் என் சொல்வேன் என் நண்பனை பற்றி, மற்ற மானிடர்கள் விவரிக்க நெடும் பயணம் செய்யாதேன பூலோகம் கதைக்க என் இறுதி மூச்சு வரை எனக்காய் எதிர்பார்ப்புல்லா இதயம் இருப்பின் அவன் மட்டுமே.
என் நட்பின் இலக்கணமாய் என் நண்பன்
© அருள்மொழி வேந்தன்