...

2 views

ஒற்றை நிராகரிப்பு
ஒற்றை நிராகரிப்பு
என்ன செய்யும்?

பகிரியின் நிலைத்
தகவலை நீ பார்த்தாயா?
என நொடிக்கொரு முறை
பார்த்துக் கொண்டிருக்கும்.

நீ தந்து,
எனக்கு கோபப்படாதே
என போதிக்கும்
புத்தர் சிலை

இப்பொழுதெல்லாம் கவலைப்படாதே,
" அவள் உன்னிடம்
பேசுவாள்!"
என ஆறுதல் கூறி
கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு
அலைபேசி அழைப்பும்
உன் அழைப்பா
என
மனம்
பதைபதைக்கிறது.

எவரிடம் பேசினாலும்
மனம்
அலை பேசி
குறுஞ்செய்தி ஒலிப்பை
கவனிக்கிறது .
...