...

3 views

நினைவில் நிற்கும்
துரு துரு வென்று ஓடிய குட்டி பாதங்கள் தாழ்வாரம் தாவல் தொக்கி நின்ற கம்பிகளின் உறுதி ஊடே உள்ளே சுற்றி சுற்றி வளைந்து ஓடிய தூண் களும் மழை காலத்தில் ஓடுகளில் இருந்தும் கொட்டும் வான் கொட்டும் சத்தத்தில் ஓர் கொண்டாட்டம் குதூகலம் குலுங்கி சிரித்த பச்சரிசி குட்டி பற்கள் தாளமும் தயங்காமல் ஆடைகளை நனைத்து விளையாடும் பெரிய வீடு திண்ணை
ஊர் விழாவில் பல சிட்டு பட்டாளங்களின் அரங்கமேடையாகும் ஆனால் காலப்போக்கில் பொலிவு இழந்தது,
நினைவுகளால் பின்னப்பட்டது,
அது பழைய வீடுதான்
இன்று அது உருவம் கூட மண்ணில் இல்லை. நினைவுகள் மட்டும் நெஞ்சத்தில் பதித்து அவ்வப்போது மேலெழும்பும்
வணக்கம் 🌼🙏🏾
© Ash(ஈசன் )

Related Stories