...

1 views

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்,

என் காதல் என்னும் பயணம்,
எங்கே செல்கிறது என்று அறியா காலை சூரியன் போல் எல்லா இடமும் மனம் பரவி இருக்க, அவள் வதனம் காண என் இரு விழி துடித்திருக்க, நீராவி போல இதயம் காற்றோடு கலந்து விட, ஒரு முறை அவளை காண்பேனா அறியேன் நான்,
இந்த காதல் எங்கே செல்கிறதோ, அவள் என்னவள் இல்லை என நான் அறிவேன் ஆயினும் அவள் வாசம் வேண்டும் என் சுவாசம் மீள,
வலையோசை கேட்கிறது ஏனோ அவள் தான் என மனம் திரும்பி பார்க்கிறது, அங்கே அவள் இல்லை,
என் நினைவுகள் எல்லாம் அவள் எண்ணம் இருக்க, என் கன்னம் எல்லாம் வழிதோடும் நீர் துளிகளும்,
கண்ணம்மா அவள் தானோ தெரிய வில்லையே,
அவள் தான் என்றால் ஏன் என்னை விட்டு சென்றால்,
ஒரு வரி கூட எழுதிட முடியா நானும் ஒரு பக்க கவிதை கிறுக்கி வைத்து இருக்கிறேன் இவள் வந்த பின் தான்,
இது தான் காதலோ
அன்பில் தொடங்கி
அன்பில் முற்று பெற நினைத்து முதல் அறிந்த என்னால் முடிவு அறியாத பொழுதில் எப்படி முடியும் என்னால்.
காதல் என்னும் காவியம் எல்லோருக்கும் சமமாய் அமைவதில்லை
© அருள்மொழி வேந்தன்