...

2 views

அவளும் ஒரு கவிதை
இதுவரை கண்டதில்லை நான், இரு விழி பார்த்து பேசியது இல்லை, பேச நினைத்த பொழுதில் உன் விரல் நுனியில் இருக்கும் எழுதுக்கோள் வரைந்த ஜாலம் ஏராளம், மனம் முழுதும் பல கனவுகள் வைத்திருக்க, எப்பொழுது எழுதிடுவாய் என ஏங்கும் மனதிடம் எப்படி புரிய வைப்பேன் வாரம் ஏழு நாட்கள் நகரந்து செல்ல ஏதோ ஒரு நாள் என் விழியில் தென்படும் வரிகள், அதில் நான் கண்ட மௌன மொழிகள், பேசிய பொழுதில் நான் அறிந்த கவி வரிகள், இத்தனை அறிந்தும் அவள் இசையின் உயிராய் இருப்பவள் அல்லவா, அவளும் அவளின் மௌனமும், வரியும் வரிகள் நிறைத்த கவிதையும், கவியின் காதலும், காதலின் ஆளுமையும், ஆளுமையில் அவளின் அழகியல் நான் அறிந்தேன், நிலவொளியோ அவள் நட்சத்திர கூட்ட வான் மகளோ அறியேன் நானும்.

அவளின் ஒரு பக்கம்

ஒரு கையில் புத்தகம் மறு கையில் எழுதுகோலும், அவளின் அறிவும் ஆற்றலும் என் சொல்வேன் ஆசிரியை தான் அவளும் அன்பின் அறனும் அறத்தின் அழகியலாய் ஸ்ருதி என்னும் நான் கண்ட கவிதை


© அருள்மொழி வேந்தன்