...

3 views

கானல் அல்ல நிஜம்
கனவு கானல்
கானல் கருகும்
காயும் வறண்ட
வறண்டிடும் மனது
மனது தொலைக்கும்
தொலைத்து தேடலில்
தேடல் தீர்வாகா மூட்டை
மூழ்கிடும் பழைய வேண்டா வெறுக்கும் நினைவுகள்
நித்தம் நித்தம் நிதர்சனம்
உரைக்கும் சொற்கள் சோம்பல் விடுத்து சோர்வாகாமல் சோழி யாய் உருண்டோடும் கனவின் இலக்கு இளகிடாது இகல் மொழிகள் இடும்பை கொண்டு நடைப்போடும் நாள்காட்டி நாழிகை போல் விடாமல் கனவை நோக்கி சென்றுகொண்டே இரு பாதை உனக்காய் வழிபிறக்கும் நம்பிக்கையோடு காத்திரு கனவு மெய்படும்
வணக்கம் 🌼🙏
அநபாயன்🤍
© Ash(ஈசன் )