...

6 views

காதல் வயப்பட்டாள்!
வாடை திரவியம் அல்ல...
அளவிடப்பட்ட தாடியும் அல்ல...
முறுக்கும் மீசையும் அல்ல...
கூர்மையுடன் கிழிக்கும்
விழிகள் அல்ல...
வெளுக்கும் வெள்ளை ஆளும் அல்ல...
தடுக்கிவிழும்
கண்ணங்குழியும் அல்ல...
பசைத் தடவிய நீல் மையிறும் அல்ல....
கட்டிட மெய்யும் அல்ல...
பைகள் நிறைந்து வழியும் பணத் தாள்கள் அல்ல...
சேர்த்து வைத்த சொத்துகள் அல்ல...
பிறர் தேடும் மாளிகை அல்ல...
இவைகளை தேடா மனம்...
தேடியது அவன் மனம் அதை!
தோற்றத்திற்கு தேர்வில்லை...
தேடிய உள்ளதிற்கே மதிப்பெண்னென...
வரையிருத்தவள்
அவன் அகம் புகுந்து
அவன் வசம் வந்தாள்...
அவனோடு மனம் கோர்ந்து
காதல் வயப்பட்டாள்!



© kookoo