...

7 views

அவள்!
அள்ளி முடிந்தக் கொண்டையும்...
கூட அழகு சேர்க்க மல்லியோடு கனகாம்பரமும்...
வில்லுகளுக்கிடையே சிவந்தக் குங்குமமும்...
மை விழியாள் வனப்பும்...
காதோரம் மினுமினுவென லோலாக்கும்...
நெஞ்சோடு நெஞ்சாய் அனஞ்சிக் கிடக்கும் ஒத்த சங்கிலியும்...
கிளிப் பச்சை ரவிக்கையும்...
ஏத்தி கட்டி
இடையோரம் சொருகிய செந்தூரப்பூ நிற சேலையும்...
உள்ளங்கைத் தாமரையில்
மருதாணி வாசமும்...
முகம் முதல் பாதம் வரை படிந்த மஞ்சளும்...
செவ்வந்திக் கைகளுக்கு
கலகலவென
கண்ணாடி வளையலும்...
ச்சல் ச்சலென சங்கு பூ காலுக்கு கொலுசும்...
மொத்தத்தில் மொத்த மலர்களும் அடங்கிய
பூங்கொத்து...
மணம் தந்தவளிடம்
மனம் தொலைத்தேன்...
தேட விருப்பமில்லை
முடிந்தால் என்னையும் எடுத்துப் போகட்டும் அவள்!


© kookoo