...

4 views

மகிழ்வதனா..
மகிழ்வதனா..
மகிழ்வதனா..
மந்திர முல்லை
தோட்டம்..

அவள்
மகிழ்வதனால்
மகிழ்வதனால்
மழையும் கொஞ்சம்
கூட்டும்..

அவள் பேச..
மகிழ்ச்சி தரும்
கானம்..
மகிழ்ந்து வர
தோணும்..

அவளின்
மாயமுள்ள
கண்கள்..
மகிழ்ந்து காண
வேணும்..

அந்த
மாட்சியுள்ள
பெண்ணை..
மதிநிலவும் சற்று
தேடும்..

அவள்
நடந்துசெல்ல
மானும்..
மருண்டு வெட்கி
ஓடும்..

அவள்
எழுந்துவர
மயிலும்..
சேர்ந்து வர
இயலும்..
...