...

6 views

தனிமை என்னும் அவள்
தனிமை என்னும் அவள்...

நீங்காத் துயரில் நினைவினை இழந்தால்

நெஞ்சில் சாய்த்திடும் நிறைமதி என்னவள்...

ஆறுதல் தேடி அழுதிடும் நொடிதனில்

அரவணைத்துத் தேற்றும் அழகிய பெண்ணவள் ...

அமைதி அளித்திடும் ஆனந்த மலர் அவள்...

ஆழ்மனம் தேடிடும் அதிசய மருந்தவள்...

கவலை நோயதைக் கடந்திச் செய்பவள்...

காற்றதன் உருவையும் கண்டிட வைப்பவள்...

இயற்கையின் உயிர்ப்பினை உணர்த்திடும் உறவவள்...

ஈடில்லாக் காதலால் என்னோடு வருபவள்...

இறைவன் படைத்த‌ இனிய தேன் ஊற்றவள்...

இதய அறையினில் அசைந்தாடும் காற்றவள்...

தனிமை என்னும் பெயருக்கு உரியவள்...

தள்ளாடும் வயதிலும்‌ தாங்கிடும்‌ பெரியவள்...

வெறுத்திடும் நபரையும் விரும்பிடும் நல்லவள்...

வேண்டாம் என்றாலும் ஈர்த்திடும் வல்லவள்...

கவிஞனின் மனதினில் காவியம்‌ படைப்பவள்...

கசந்திடும் காதலின் வலியையும் துடைப்பவள்...

தனிமை என்னும் அவள்...
© த.கிருத்திகா