...

6 views

கடைக்கண் பார்வை..
கடைக்கண் பார்வை
போதுமடி..
கண்டநொடி அப்படியே
நீளவேண்டுமடி..
காலை மாலையென
மாறுதடி..
நேரத்தின் நேர்த்தியும்
நேர்மை தவறுதடி..
கானகமும் காதலதை
வேண்டுமடி..

காணாத தேசமெங்கும்
கண்டது போல்..
காரிருளே கண்டம்விட்டு
விலகியது போல்..
கானமது காதில்
காதலோடு பாட..
காட்டாத மாயத்தை
காட்டி போனாய்..
கடைக்கண் பார்வை
கணக்கில்..

மீனின் கண்ணும்
பிதுங்கி போனது..
வானவில்லும் வட்டமாய்
வளைந்து போனது..
இயற்கையும் இயன்றதை
இயற்றாமல் போனதோ..
காட்டாறு காணாமல்
கம்மி போனது..
அருவியும் ஆர்பரிக்காது
அப்படியே நின்றது..

கடலும் சீறாது..
அலையும் அலையாது..
மீனும் நீந்தாது..
மானும் ஓடாது..
புலியும் பாயாது..
மரமும் அசையாது..
அப்படியே நின்றது..
அம்மணி அவளின்
கடைக்கண் பார்வையதை
கண்டபோது எனக்கு..

கண்ட அதிசயங்களும்
காணாமல் மறையுதடி..
மல்யுத்தமும் மாறாமல்
நடக்குதடி..
பார்வையதில் பாவை
உனக்கும் எனக்கும்..
அந்த கணத்தை வங்கியில்
சேகரிக்க வேண்டுமடி..
வட்டியுடன் மொத்தமாக
வாங்கியதை தருவேண்டுமடி..

திரும்பி நீபார்க்கும்
வேளையதில்..
தீராத ஆசையும்
தீருமடி..
திகட்டாத தேனாய்
தீராகாதலோடு..
திரண்டு வாழ்ந்திருக்க
வேண்டுமடி..
திரவியமும் நீயே..
திவ்வியமும் நீயே..

அமுதமும் நீயே..
அலைகடலும் நீயே..
அகப்படுவாய் என
அலையாய் நானே..
அகப்பட்டு வாழ
நம்மில் நாமாய்..
ஆசையுடன் அயராது
என்னில் உன்னை
தாங்க துணிபவனும்
நானே..

கடைக்கண் பாவையே
வாழ்க்கை பாதையில்..
வழித்துணையாக நீ
வந்தால்..
வரமாய் மாறுமிந்த
வாழ்வுமதும்..
வரமாய் வரும்கணமே
வளமாய் மாறுமே..
வாழ்வுமதும் வசீகரம்
கொண்டு..

© CG Kumaran