...

4 views

எந்தன் இயற்கையே..
என்னை மாற்றும்
இயற்கையே..
என்றும் மாறா
இயற்கையே..

என்னை இயக்கும்
இயற்கையே..
என்னுள் இருக்கும்
இயற்கையே..

என்னை ஏற்கும்
இயற்கையே..
என்னை ஏங்கும்
இயற்கையே..

என்னுள் துடிக்கும்
இயற்கையே..
என்றும் துயிலா
இயற்கையே..

என்னை ரசிக்கும்
இயற்கையே..
என்னுள் ரசனையாய்
இயற்கையே..

எந்தன் சுவாசமாய்
இயற்கையே..
எல்லோரும் சுவாசிக்கும்
இயற்கையே..

எந்தன் நிறைவாய்
இயற்கையே..
எங்கும் நிறைந்த
இயற்கையே..

எந்தன் பயணம்
இயற்கையே..
எங்கும் பரந்த
இயற்கையே..

எந்தன் வாழ்வும்
இயற்கையே..
எந்தன் காதல்
இயற்கையே..

எங்கும் எதிலும்
இயற்கையே..
எழிலும் அழகும்
இயற்கையே..

செயற்கையிலும்
இயற்கையே..
சேர்க்கையிலும்
இயற்கையே..

பிணைப்பின் ஆயத்தம்
இயற்கையே..
பிறப்பின் காரணம்
இயற்கையே..

அலையின் உயரம்
இயற்கையே..
அலையென அலைவது
இயற்கையே..

கரையும் கடலும்
இயற்கையே..
கரையும் நிலவும்
இயற்கையே..

நிழலும் நீயும்
இயற்கையே..
நிலவின் நிறமும்
இயற்கையே..

சுடும் சூரியனும்
இயற்கையே..
குளிர் பனியும்
இயற்கையே..

ஓடும் ஆறும்
இயற்கையே..
ஓங்கிய மரமும்
இயற்கையே..

வானுயர்ந்த மலையும்
இயற்கையே..
வண்ண மேகமும்
இயற்கையே..

பொழியும் மழையும்
இயற்கையே..
பொங்கும் அருவியும்
இயற்கையே..

வனப்பான வனமும்
இயற்கையே..
வசியப்படுத்தும்
இயற்கையே..

© CG Kumaran