...

6 views

கா....விரி..!
வேழ முகத்தோனே..
வேதியன் அகத்தியனின்
கமண்டலச் சிறைப்பட்ட..
காவிரியை விடுவித்து
நானிலம் செழிக்கச்
செய்தவனே..
நீயன்றோ..
முதல்
பொதுநலவிரும்பி..!
இன்றோ...
கர்நாடக நீர்த்தேக்கங்களில்
கனமழை
பொழிந்தால்தான்..
தமிழகத்திற்கு
மதகுகள் திறக்கின்றன..!
காவிரித்தாயை
கலங்க வைக்கிறார்..
'மண்ணின் மைந்தர்கள்'!
'நடந்தாய் வாழி காவிரி'...
என..
அகத்தியன் வழிவந்த
நாங்கள்...
ஆடிப்பெருக்கு
நாளிலாவது..
புதுவெள்ளமாய்க்
காவிரியைக்
காண்போமா..
என ஏங்கித்
தவிக்கிறோம்..!
அன்று..அடைபட்ட
காவிரியைப்
பொங்கியோடச்
செய்தாய்..!
இன்று..தடையில்லாக்
காவிரியைப்
பெருகிடச்
செய்து..
கருகிடும்..பயிர்களைக்
காப்பாய்...🙏




© SrinivasRaghu