...

5 views

உன்னைத் தேடு
தோழனே!
ஒரு பரிட்சை தோல்விக்காக
உன் உயிரை
மாய்த்துக் கொள்வதா?
பேனாவை எடுத்து
கிறுக்கிப் பார்
உனக்குள் ஒரு கவிஞன்
ஒளிந்திருக்கலாம்...
தூரிகையை எடுத்து
மேலும் கீழும்
கோடுகளைப் போடு
உனக்குள் ஒரு ஓவியன்
ஒளிந்திருக்கலாம்...
கண்ணாடி முன் நின்று
பல பாவனைகள் காட்டு
உனக்குள் ஒரு நடிகன்
ஒளிந்திருக்கலாம்...
உனக்குள் ஆயிரம்
திறமைகள் ஒளிந்திருக்க...
நீ ஏன் உன்னையே
மாய்த்துக் கொள்கிறாய்?

விக்ணு கௌசிகா