...

3 views

தொலைந்து போ
நமைத்
தேடும் உள்ளங்கள் எல்லாம்
ஏனோ
நமக்கு பிடித்தமாய் இருப்பதில்லை
நாம்
தேடும் உங்களுக்கும்
அப்படி
நாமும் பிடித்தமாய் இருப்பதில்லை

விலகவும் விலக்கவும் விளக்கங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.

யாரும் கொட்டிவிடலாம் அன்பை விரும்பி
எவரும் பெற்றிட இயலாது அதை
இரந்து

தானாய் தராததைத் - தேடாமல் தொலைந்து போவதே மேன்மை.

எங்கேனும் இருக்கக்கூடும் யாரேனும் தேடக்கூடும் - உனை

அப்போதும் நீ தொலையாது இருந்தால் எப்போதும் - நீ

தேடுபவரை காணாமல்
தொலைந்தே பேவாய்
அதனால்,
ஆனமட்டும் வேகமாய் தொலைந்து போ...!
© Dr. Rajina Banu A