...

10 views

விழி
விழி பார்த்து
மயங்கிய
என்னை
விதி செய்த
சதியின்
மீட்சியில்
இன்று
சதிகாரி
இவளின்
சரீரமாய்
மாறிப்போகிறேன்..!

உள்ளத்தால்
மாண்ட
என்னை
உயிர்பூட்டிடும்
உணர்வின்
பிடியில்
மைப்பூசிடும்
மௌனமொழியாள்
கைபிடிக்க
காரணம்
கேட்கிறாள்
உயிர் பற்றிட்ட
உண்மை காதலை
மறைத்தது ஏனோ
நானறியேனடி
என் காதல் ராட்சசி..!

© Manis✒️தனிமைகாதலன்